நீலகிரி மாவட்டம், தும்மனட்டி ஊராட்சி பட்டர்கம்பை பகுதியில் மழையினால் சேதமடைந்த சாய்நந்தினி என்பவரின் வீட்டினை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் செவ்வாயன்று நேரில் பார்வையிட்டு நிவாரணத் தொகையினை வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், உதகை வருவாய் கோட்டாட்சியர் துறைசாமி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.