districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பேருந்து வசதி இல்லாமல் தவிப்பு

நாமக்கல், செப்.12- நாமக்கல் மாவட்ட புறநகர் பகுதிகளில் போதிய  பேருந்து வசதி இல்லாமல் தவிப்பதாக மாணவ மாணவி யர் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பல முறை  புகார் அளித்தும் யாரும் கண்டு கொள்வதில்லை  என குற்றம் சாட்டி வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மல்லசமுத்திரம் காளிப்பட்டி அருகே உள்ள குறுக் கலாம் பாளையம், அம்மாபாளையம், கோணங்கி பாளையம், ஜக்கமா தெரு ஆகிய பகுதிகள் உள்ளது. அப்பகுதியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி என இரண்டு பள்ளிகள் உள்ளது. உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு மல்ல சமுத்திரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இங்கி ருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மல்லசமுத்திரம் சென்று உயர்நிலை கல்வி படித்து வருகி்னறனர்.  ஆனாலும், இங்குள்ள மாணவர்கள் காலை மற்றும்  மாலை நேரத்தில் 3 கிமீ புத்தக பையுடன் காளி பட்டி வரை நடந்து சென்று பேருந்து ஏற வேண்டிய நிலை  உள்ளது. கடைசி பேருந்தை பிடிக்க வேண்டி உள்ள தால் படிக்கட்டுகளில் தொங்கிய படி செல்ல வேண்டி  உள்ளது. பல நேரங்களில் ஆசிரியர்கள் திட்டுவார் கள் என்ற பயத்தில் வகுப்புகளை புறக்கணிக்கும் சம்ப வங்களும் நடந்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் 6 மாணவி கள் 2 மாணவர்கள் என 8 பேர் 8-ம் வகுப்புடன் பள்ளி  செல்வதை நிறுத்தி விட்டனர். எனவே, போதிய பேருந்து  வசதிகளை செய்து தர வேண்டும் என ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

வெள்ளிப் பொருட்கள் தேக்கம்: தொழிலாளர்கள் கவலை

சேலம், செப்.12- ஓணம் பண்டிக்கைக்கான ஆர்டர்கள் குறைந்ததால் சேலத்தில் வெள்ளிப் பொருட்கள் தேக்கமடைந்துள்ளதால், வெள்ளித் தொழிலை நம்பியுள்ள தொழிலாளா்கள் கலக் கம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்  கொலுசு உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகி றது. இங்கிருந்து கேரளம், ஆந்திர மாநிலத்துக்கு அதிகள வில் வெள்ளிப் பொருட்கள் விற்பனைக்கு அனுப்பப் படுகின்றன. அண்மையில் கேரள மாநிலம், வயநாட்டில் ஏற் பட்ட நிலச்சரிவு, பல்வேறு பகுதிகளில் பெய்த தொடர்  மழை காரணமாக தற்போது ஓணம் பண்டிகைக்கான ஆர்டர்  குறைந்துள்ளன. இதனால் சேலத்தில் வெள்ளிப் பொருட் கள் தேக்கமடைந்துள்ளன. இதுகுறித்து சேலம் வெள்ளிக் கொலுசு கைவினை தொழிலாளர்கள் நலச்சங்கத்தினர் கூறு கையில், சேலம் மாவட்டத்தில் பனங்காடு, சிவதாபுரம், சேலத் தாம்பட்டி, அரியாகவுண்டம்பட்டி, தளவாய்பட்டி, கொல்லப் பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் வெள்ளிக் கொலுசு, அரைஞாண் கொடி, மெட்டி, வெள்ளிப் பொருட் கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் வரை வேலைவாய்ப்பு பெறுகின்றனர். சேலத்தில் இருந்து கேரளம், கர்நாடகம், ஆந்திரம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் உள்பட பல் வேறு மாநிலங்களுக்கு வெள்ளிக்கொலுசு உள்ளிட்ட வெள் ளிப் பொருட்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. குறிப்பாக, ஓணம் பண்டிகையின் போது கேரளத்துக்கு வெள்ளிக் கொலுசுகள் அதிகளவில் அனுப்பப்படும். இதற் காக முன்கூட்டியே ஆர்டர்கள் குவியும். ஆனால், இந்த ஆண்டு ஆர்டர்கள் 60 சதவிகிதமாக குறைந்துள்ளது. கேர ளம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும்  வெள்ளத்தால் அந்த மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. இதனால் அங்கு ஓணம் பண்டிகை கொண்டா டப்படாததால் சேலம் வெள்ளிப் பொருட்களை அங்கு அனுப்ப முடியவில்லை. இதனால் வெள்ளிப் பொருட்கள் தேக்கமடைந்துள்ளதென, தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் மீது பொய் வழக்கு:  மாதர் சங்கம் கண்டனம்

தருமபுரி, செப்.12- பாதிக்கப்பட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வ ழக்கை திரும்பப்பெற வேண்டும் என அனைந்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பாப்பா ரப்பட்டி அருகே உள்ள பிக்கிலி ஊராட்சி, பெரியூர் கிராமத் தைச் சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான வாசுகி (40). இவரது கணவர் ஐயப்பன் (45); பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர். இதே ஊரைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மனைவி சகுந்தலா (45), பெரியூரில் உள்ள நிலத்தில் மாடு கட்டுவது தொடர்பாக வாசுகிக்கும், சகுந்தலாவுக்கும் தக ராறு ஏற்பட்டது. இதில் வாசுகி மற்றும் கணவர் ஐயப்பன் ஆகி யோர், சகுந்தலாவை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சகுந்தலா, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே, இதுகுறித்து சகுந்தலா கொடுத்த புகாரின் பேரில், வாசுகி மற்றும் ஐயப்பன் ஆகிய இருவரும் மீதும், பெண்ணை தாக்கியதாக காவல் துறையினர் வழக்குப்ப திவு செய்தனர். மேலும், வாசுகி அளித்த புகாரின் பேரில், சகுந்தலா, அவரது கணவர் முனிராஜ், உறவினர் முரளி ஆகியோர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இச்சம்பவத்தில் சகுந்தலா, முனிராஜ் ஆகியோர் ஐய்யப்பன், வாசுகி-யால் தாக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சகுந்தலா, முனிராஜ் மீது பாப்பாரப்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தி ருப்பது கண்டனத்திற்குரியது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெற வேண்டும், என அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கழிவுநீர் தொட்டிகள் சுத்தம்  செய்ய  மனிதர்களை பயன்படுத்த தடை

நாமக்கல், செப். 11- கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்கள் பயன்ப டுத்த தடை விதித்திருப்பதாக நாமக்கல் ஆட்சியர் ச.உமா தெரிவித்தார். உள்ளாட்சி அமைப்புகளில் சாக்கடைகள்  மற்றும் கசடு கழிவுநீர் தொட்டிகள் மேலாண்மை தொடர்பான அபாயகர மானவற்றை நீக்குதலை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணைய கூட்டம் புத னன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர்,  நகராட்சி ஆணையா ளர்கள், தீயணைப்பு அலுவலர், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், தாட்கோ மேலாளர், சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் அடங்கிய துப்புரவு ஆணையம் அமைக்கப்பட்டுள் ளது.  இந்த ஆணைய கூட்டத்தை தொடர்ந்து, ஆட்சியர் கூறிய தாவது, கசடு  மற்றும்  கழிவு நீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணிக்கு இயந்திரங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். மனிதர்கள் உள்ளே இறங்கி சுத்தம் செய்வது முற்றிலு மாக தடை செய்யப்பட்டுள்ளது. கசடு கழிவு  நீர்  அகற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்து வதை உறுதி செய்ய வேண்டும். பயிற்சி பெற்ற பணியாளர் களையே  ஈடுபடுத்த  வேண்டும். மனிதக் கழிவுகளை அகற்று வதற்கு மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. கழிவு நீர் அகற்றும் பணியில் அபாயம்  ஏற்பட்டால், அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படும் உதவி எண் 14420 குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மனிதக் கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டப்படி மனிதர்களை கொண்டு கைகளால் கழிவுகளை அகற்றுவது  முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.   இச்சட்டத்தின்  கீழ்  மீறப்படும்  குற்றங்களுக்கு ஜாமீனில் வர அனுமதி கிடையாது. நேரடியாகவோ அல்லது மறைமுக மாகவோ எந்தவொரு  நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் அல்லது கழிவுநீர் தொட்டியை ஈடுபடுத்தக் கூடாது. இதனை முதல் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது ரூ.2.00 இலட்சம் அபராதம் விதிக்கப்படும்.மீண்டும்  மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது  ரூ.5.00 இலட்சம் அபராதம் அல்லது  இரண்டு சேர்த்து விதிக்கப்படும். என்றார்.

வங்கி கடன் மீதான வட்டி குறைத்திடுக ஒன்றிய நிதியமைச்சரிடம் வலியுறுத்தல்

கோவை, செப்.12- கோவை பம்ப்செட் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் (கோப்மா) சார்பில் நிதி அமைச்சர் நிர் மலா சீதாராமனிடம், மோட்டார் பம்ப் செட் மீதான ஜி.எஸ்.டி. வரி மற்றும் குறுந் தொழில் முனைவோர் வங்கி கடன் மீதான வட்டி குறைக்க வலியுறுத்தி யுள்ளனர்.  இதுகுறித்து கோப்மா சார்பில் நிர் மலா சீதாராமனுக்கு அனுப்பிய கடிதத் தில் தெரிவித்துள்ளதாவது, இந்தியா வில் விவசாயத்திற்கு நீர் பாய்ச்ச பெரி தும் உதவுகின்ற கருவிகளில் மோட்டார் பம்ப்செட் மிக முக்கிய இடத்தில் உள் ளது. கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான ஜி.எஸ்.டி-யில் பம்ப்செட் விற்ப னைக்கு 12 சதவீகிதம் வரி விதிக்கப்பட்டி ருந்தது. தற்போது அதை 18 சதவீகித மாக மாற்றி அமைத்து விட்டீர்கள். மீண்டும் மோட்டார் பம்ப்செட்டிற்கான விற்பனை வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டுகிறோம். இன்றைய காலகட்டத்தில் வங்கிக ளில் தொழிற் கடன் கிடைப்பது மிகக் கஷ்டமாகிவிட்டது. ஆனால், வங்கியில் குறுந்தொழில் முனைவோர் வாங்கிய கடனுக்கு 11 சதவீதம் வரை வட்டி யாக கட்டவேண்டியுள்ளது. குறுந்தொ ழில் முனைவோர் நலன் கருதி ரூ. 25 லட்சம் தொகை வரையிலும் 6 சதவீதம் வட்டியில் தொழிற் கடன் வழங்கிட வங்கி அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். குறுந்தொழில் முனைவோர் தொழில் நடத்த வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள். பல வருடங்களாக சரியான முறையில் வட்டி கட்டி வந்தும் கூட விற்றுக் கொள்முதல் (Turnover) போதுமான வகையில் இல்லை என்று கூறி வாங்கிய கடனை உடனே செலுத்த கட்டாயப்படுத்துகிறார்கள். இல்லாவிட்டால் தொழிற்சாலையின் வங்கி கணக்கை முடக்கி விடுவோம் என்று வங்கி அதிகாரிகள் மிரட்டல் விடு கிறார்கள். இதை கவனத்தில் எடுத்து தாங்கள் எங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க உத்தரவிட வேண்டுகிறோம். வங்கிகளில் 3 மாதங்கள் வட்டி செலுத் தாவிட்டால் சர்பாசி சட்டம் (Sarfaesi Act) மூலம் நடவடிக்கை எடுப்பதை 3 மாதத்திலிருந்த ஒரு வருடமாக மாற்றி கால அவகாசம் வழங்க வேண்டும். பறக்கும் படை (Flying Squad) அதி காரிகளின் சோதனையின் போது வாக னங்களில் எடுத்து செல்லப்படும் விற் பனை பில்களில் மிகச் சிறிய தவறு நேர்ந்தால் கூட அதிக அளவு அபராதம் விதிக்கிறார்கள். இதனால், குறுந்தொ ழில் முனைவோர் கடும் பொருளாதார பாதிப்பு அடைவதோடு மன உளைச்ச லுக்கும் ஆளாகிறார்கள். இதற்கு தீர்வு காண உரிய உத்தரவுகளை தொடர்பு டைய அதிகாரிகளுக்கு தாங்கள் பிறப் பிக்க வேண்டும். மோட்டார் பம்ப்செட் டிற்கு ஐசிஐ முத்திரையை உற்பத்தியா ளர்கள் அனைவருமே வாங்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், வருடத்திற்கு ஒரு முறை புதுப் பித்தல் கட்டணத்தை (Renewal Fees) முன்பிருந்ததை விட தற்போது மும்ம டங்காக அதிகாரிகள் அதிகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். எனவே, துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி எங்களுக்கு ஐஎஸ்ஐ கட்டணக் குறைப்பு செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.

கேள்வி கேட்ட இளைஞரால் கடுப்பான நிதியமைச்சர்

கோவை, செப். 12- கோவை ஊஞ்சபாளையம் அருகே இளைஞர் ஒருவர், செமி கன்டக்டர் குறித்து ஒன்றிய அரசின் நிலைப்பாடு தொடர்பாக அடுத்த டுத்து கேள்வி கேட்டதால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஆவேசமடைந்தார். கோவை மாவட்டம் சூலூர் ஊஞ்சபாளையத்தில் பாஜக உறுப் பினர் சேர்க்கை வியாழனன்று நடை பெற்றது. இதில், கலந்து கொண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கிளம்பிய போது, வெளியில் நின்று கொண்டிருந்த அருண் சந்திரன் என்ற பட்டதாரி இளைஞர், நிர்மலா சீதாராமனிடம் செல்போன் உதிரி பாகமான செமிகண்டக்டர் என்ற உதிரிபாகத்தை வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்வது ஏன் என்று கேள்வி எழுப் பினார். அதற்கு ஆவேசமடைந்த நிர்மலா சீதாராமன் அந்த இளைஞரி டம் இது தொடர்பாக அரசு வெளி யிட்டுள்ள குறிப்புகளை படித்து தெரிந்து கொண்டு, அதன்பின் டெல்லி வந்து சந்தித்து நேரடியாக விவாதம் செய்து கொள்ளுமாறு அந்த இளைஞரிடம் தெரிவித்தார். மீண்டும் அந்த இளைஞர் தொடர்ந்து நிர்மலா சீதாராமனிடம் பல்வேறு கேள்விகளை கேட்க முற்பட்டார். இதனால் கோபம் கோவம் அடைந்த நிர்மலா சீதாரா மன் பத்திரிகையாளர்களை ஒளிப்ப திவு செய்ய வேண்டாம் என எச்சரித் தார். பிறகு அந்த இளைஞரை இவ் வாறு கேள்வி கேட்கக் கூடாது என எச்சரித்தனர். இதனையடுத்து போலீசார் அந்த இளைஞரை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகு தியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தோழர் சீத்தாராம் யெச்சூரி மறைவு கோவை, திருப்பூரில் இன்று இரங்கல் ஊர்வலம்

கோவை, செப்.12- மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் தோழர்.சீத்தாராம் யெச்சூரியின்  மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைத்து கட்சியினர் பங் கேற்கும் இரங்கல் ஊர்வலம் கோவை மற்றும் திருப்பூரில் இன்று நடைபெற உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின்  கோவை மாவட்டக்குழு செயலாளர் சி.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக் கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறை விற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, வெள்ளியன்று, கோவை மாவட்டக் குழு சார்பாக மாலை 4 மணிக்கு, காந்திபுரத் தில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு அலுவலகத்தில் இருந்து இரங் கல் ஊர்வலம் துவங்கி, சித்தாபுதூர் விகேகே மேனன் சாலையில் உள்ள  ஜெயா பேக்கரி அருகில் அஞ்சலி செலுத் தும் நிகழ்ச்சி நடைபெறும் என தெரி விக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மார்க்சிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்டக்குழு செயலா ளர் செ.முத்துக்கண்ணன் வெளியிட் டுள்ள அறிக்கையில், கட்சியின் திருப் பூர் மாவட்ட செயற்குழு கூட்டம் வியாழ னன்று நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் மறைவுக்கு புக ழஞ்சி செலுத்தப்பட்டது. தோழர். சீத்தா ராம் யெச்சூரி அவர்களின் மறைவை யொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தக் கூடிய அடிப்படையில் அனைத்து அரசி யல் இயக்கங்கள் சார்பில் இரங்கல் ஊர் வலம்  திருப்பூரில் 13.9.24 வெள்ளி மாலை 4 மணிக்கு குமரன் சிலையில் இருந்து துவங்கி மாநகராட்சி அருகில் இரங்கல் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.