districts

img

பாராமரிப்பில்லாத வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் – சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்

உடுமலை, டிச.4-  உடுமலையில் சமூக விரோதி களின் கூடாரமாக மாறி வரும் வீட்டு வசதி வாரியத்தால் கட்டப் பட்ட வீடுகள் தொடர்பாக உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.  உடுமலை அருகே மருள்பட்டி யில் கடந்த 1994 ஆம் ஆண்டில்  வீட்டு வசதி வாரியத்தால் 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிறிய மற்றும் நடுத்தர நகரிய திட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாய் நிதி  ஒதுக்கீடு செய்யப்பட்டு 300 வீடு கள் கட்டப்பட்டன. ஏபிசி என மூன்று பிரிவுகளில் வீடுகளும், மேல்நிலைத் தொட்டி உட்பட கட்ட மைப்பு வசதிகளும் ஏற்படுத்தப் பட்டன. இந்நிலையில், இந்த குடி யிருப்பு பகுதிக்கு செல்ல போதிய பேருந்து வசதிகள் இல்லாத கார ணத்தாலும், தரமில்லாத கட்டு மான பணிகள் உள்ளிட்ட காரணங் களாலும், இந்த வீடுகளை ஏலம் எடுக்க அரசு அலுவலர்கள் மற்றும் இதர தரப்பினர் முன்வரவில்லை. இதனால் இந்த 300 வீடுகளும் பாராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது.  மேலும், கடந்த 2012 ஆம்  ஆண்டு வீட்டு வசதி வாரியத்தால்  மீண்டும் இந்த வீடுகளை ஏலம் விட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த நடவடிக்கையும் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து வீடுகளில் இருந்த ஜன் னல், கதவுகள் உள்ளிட்ட பொருட் கள் காணாமல் போக துவங்கி தற்போது வீட்டின் சுவர்கள் மட் டுமே எஞ்சியுள்ளது. மேலும், இப்ப குதி முழுவதும் புதர்மண்டி காணப் படுவதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. மேலும், பல்வேறு பகுதிகளிலிருந்து எடுத்து வரப்படும் கழிவுகளும் இங்கு கொட்டப்பட்டு வருவதால் குப்பைக் கிடங்காகவும் மாறி வரு கிறது. இந்த குடியிருப்பு வளா கம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருகி லுள்ள கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும், மாவட்ட நிர்வா கம் இதுவரை எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.