திருப்பூர், நவ. 6 – உடல் நலத்திற்கு உகந்த கொடம் புளி என்ற அரியவகை மர விதை களை அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலு வலக செடிப்பண்ணைக்கு கேரள வன விதை மையம் கேட்டவுடன் அனுப்பி வைத்து ஆச்சரியப்படுத்தி உள்ளது. அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தின் செடிப்பண்ணையில் நடவு செய்வ தற்காக ஒரு கிலோ கொடம்புளி மர விதைகளை அனுப்பி வைக்கும்படி கேட்டு கடந்த சனிக்கிழமை (நவ.2) அன்று கேரள வன விதை மையத்திற்கு அலுவலகப் பணியாளர் பணம் அனுப்பி வைத்துள்ளார். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களாக இருந்த நிலை யில் கேரள அரசுத் துறையினர் கொடம் புளி விதைகளை ஒரு வாரம், 10 நாட்க ளில் அனுப்பி வைக்கலாம் என்று இங்கி ருக்கும் பணியாளர் எதிர்பார்த்திருந் தார். ஆனால் மூன்று நாட்கள் இடை வெளியில் புதன்கிழமை காலையி லேயே கொடம்புளி விதை பார்சல் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவல கத்திற்கு வந்து சேர்ந்தது. இதை பெற்றுக் கொண்ட பணியாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநில அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கேரள வன ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் கேரள வன விதை மையம் செயல்பட்டு வரு கிறது. தமிழ்நாட்டில் இருந்து பணம் செலுத்தி குறைந்த அளவிலான விதை களைக் கேட்டிருந்தபோதும், பொறுப் புடன் அவர்கள் உடனடியாக அனுப்பி வைத்தது ஆச்சரியமாகவும், இன்ப அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் கூறினர். பொதுவாக அரசுத் துறை என் றாலே, எந்த ஒரு பணியும் எளிதில் நடக் காது, கால தாமதம் ஆகும் என்பது தான் நமது அனுபவமாக உள்ளது. ஆனால் கேரள மாநில அரசின் வனத் துறையின் கீழ் இயங்கும் வன விதை மையம் வாடிக்கையாளர்களின் தேவைக்குக் கேட்டவுடன் விரைவான சேவை வழங்கியது பாராட்டுக்குரி யது. கேரள அரசின் நிர்வாகச் செயல் பாட்டிற்கு இந்த ஒரு விசயமே சான்றாக உள்ளது என்று அவிநாசி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் தெரிவித்த னர்.