திருப்பூர், ஜூலை 25- கல்லூரிக்கு கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வலியுறுத்தி மாணவர் சங்கம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. காங்கேயம் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி முன்பு கல்லூரி மாணவர்க ளுக்கு கூடுதல் பேருந்து வசதி வேண்டி இந் திய மாணவர் சங்கம் சார்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக் கத்தை திருப்பூர் மாவட்ட தலைவர் க. சு.கல்கி ராஜ் துவக்கி வைத்தார். மாரி இசக்கி, வே. சரிகா, செ.இளமதி உட்பட அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.