அவிநாசி,செப்.3- அவிநாசி அருகே திருமுருகன் பூண்டி நகராட்சியில் மோடி அரசை கண்டித்து சிபிஎம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இந்தியாவின் இருளை அகற்றவும், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து திருமுரு கன் பூண்டி நகராட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் தெருமுனை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.வெங்கடா சலம், ஒன்றிய செயலாளர் ஏ. ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, சிபிஎம் நகர மன்ற உறுப்பி னர்கள் சுப்பிரமணியம், தேவராஜன், பார்வதி சிவகுமார் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் அவிநாசி ஒன்றியதில் 35க்கும் மேற்பட்ட கிளைகளில் துண்டறிக்கை விநியோகம் செய்தனர்.