districts

நீரோடைகள் வறண்டன: ஊருக்குள் வனவிலங்குகள் வரும் அபாயம்

கோவை, ஜூலை 2- ஆனைமலை புலிகள் காப்பகத் திற்குட்பட்ட வனப்பகுதிகளில் உள்ள நீரோடைகள் வறண்டதால், உணவு மற்றும் தண்ணீர் தேடிவ வனவிலங்கு கள் ஊருக்குள் வருவது அதிகரிக் கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங் கள் உள்ளன. இந்த வனச்சரகங்க ளில் யானை, புலி, சிறுத்தை உள் ளிட்ட வனவிலங்குகளும், அரிய  வகை பறவை மற்றும் தாவர இனங் கள் உள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரண மாக நீரோடைகளில் ஆண்டுதோறும் நீர்வரத்து இருக்கும். இந்த ஆண்டு கடந்த ஜூன் 1 ஆம் தேதி பெய்ய  தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்க வில்லை. இதன் காரணமாக வனப் பகுதிகளில் உள்ள நீரோடைகள், தடுப்பணைகள் வறண்டு கிடக்கின் றன. இதனால் தண்ணீர் பாய்ந்து  சென்ற தடுப்பணைகள் பாறைகளாக காட்சி அளிக்கின்றன. இதன் காரண மாக யானைகள் கூட்டம், கூட்டமாக தாகம் தீர்க்க ஆழியாறு அணைக்கு படையெடுத்து வருகின்றன. மேலும் வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறையினர் வனப் பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். பொள்ளாச்சி, உலாந்தி வனச்சரகங் களில் டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு சென்று நிரப்பப்படுகிறது. மேலும், வனக்குட்டை உருவாக்கி ஆழ்துளை கிணறு மூலமும் சோலார் பொருத்தி தண்ணீர் நிரப்பும் பணி யில் வனத்துறையினர் ஈடுபட்டு வரு கின்றனர். இதற்கிடையில் பரம்பிக் குளம், ஆழியாறு, சோலையாறு உள் ளிட்ட பிஏபி அணைகளிலும் நாளுக்கு நாள் நீர்வரத்து குறைந்து வருகிறது. ஜூலை மாதம் தொடக்கத்தில் கடல் போல் காட்சி அளிக்கும் பரம்பிக் குளம், ஆழியாறு அணைகள் குட்டை போன்று காட்சியளிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கடைசியில் பிஏபி அணைகளில் 10.7 டி.எம்.சி. நீர் இருந் தது. ஆனால், இந்த ஆண்டு 1.9  டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டை விட 8.8. டிஎம்சி நீர் பற்றாக்குறையாக உள்ளதால் குடி நீர், பாசனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, வனப்பகுதியில் ஏற் பட்ட வறட்சியால் வனவிலங்குகள் உணவு தேடி ஊருக்குள் வந்து  கொண்டிருக்கின்றன. இந்நிலை யில், வனப்பகுதியில் உள்ள நீரோ டைகளும் வறண்டு காணப்படுவ தால், வனவிலங்குகள் உணவு மற் றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் வருவது அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.