districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

அன்னூர் வட்டக்கிளை மாநாடு

கோவை, அக்.5- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோவை மாவட்டம், அன்னூர் வட்டக்கிளையின் 9 ஆவது மாநாடு அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.  வட்டக்கிளைத் தலைவர் முருகேசன் தலைமையில் நடை பெற்ற மாநாட்டில், செயலாளர் சிவக்குமார் அறிக் கையை முன்வைத்தார். இதில், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர். ச.ஜெகநாதன், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம்.வேலுமணி உள்ளிட்டோர் உரையாற்றி னர். இதில், தலைவராக முருகேசன், செயலாளராக குருநாதர், பொருளாளராக சுதா உள்ளிட்டோர் நிர்வா கிகளாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில், விஸ்வநாதன் நன்றி கூறினார்.

பட்டுக்கூடு 63 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை

நாமக்கல், அக். 5- ராசிபுரத்தில் வியழனன்று பட்டுக்கூடு ஏலம் நடை பெற்றது. ஏலத்தில், 110 கிலோ பட்டுக்கூடு, 63 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில், கூட்டுறவு பட்டுக் கூடு விற்பனை நிலையம் உள்ளது. தினசரி இங்கு பட்டு  விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு மாவட் டங்களில் இருந்து விவசாயிகள் ராசிபுரம் வந்து, பட்டுக்கூ டுகளை விற்பனை செய்து வருகின்றனர். வியழனன்று, 110 கிலோ பட்டுக்கூடு விற்பனையானது. அதிகபட்சமாக கிலோ  640 ரூபாய், குறைந்தபட்சமாக 400 ரூபாய், சராசரியாக கிலோ, 575 ரூபாய்க்கு விற்பனையானது. 110 கிலோ பட்டுக்கூடு, 63 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

ஏடிஎம் கொள்ளை   கேரள போலீசார் விசாரணை

சேலம், அக்.5- ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு நாமக் கலில் கைது செய்யப்பட்டவர்களை  கேரள மாநில போலீசார் விசாரணைக்காக வெள்ளி யன்று அழைத்துச் சென்றனர். கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் 8 ஏடிஎம் மையங்களில் கொள்ளை அடித்த அரியானா மாநில ஏடிஎம் கொள்ளையர்கள், தமிழகம் வழியாக தப்பிச் செல்ல முயன்ற போது, நாமக்கல் போலீசார் மடக்கி பிடித்த னர். இதில், நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் குண்டு பாய்ந்து காயமடைந்து கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மற்ற ஐந்து பேர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு சேலம் மத்திய சிறை யில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து பேரை கேரள மாநிலம் திருச்சூர் போலீ சார் வெள்ளியன்று திருச்சூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மத்திய சிறையில் இருந்த இர்பான், சபீர் கான், செளகீன், முக மது இக்ரம், முபாரக் உள்ளிட்ட ஐந்து கொள் ளையர்களை திருச்சூர் அழைத்துச் சென்ற னர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டு சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத் தனர். அதன் பின்னர் திருச்சூர் போலீ சார் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். 

நம்பிக்கைதான் மூலதனம் - கிரிக்கெட் வீரர் நடராஜன்

சேலம், அக். 5- எவ்வளவு தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும், நம்பிக்கை தான் நமக்கு மூலதனம் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்தார். கிரிக்கெட் சங்கத்தின் 64வது ஆண்டு விழா சேலத்தில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், வெற்றி பெற்ற அணிகளுக்கு பாராட்டு சான்றிதழ் கேடயங்கள் வழங்கி கௌரவித்தார். இதனைத்தொடர்ந்து நடராஜன் பேசுகை யில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்பம் சங்களுடன் கிரிக்கெட் மைதானம் அமைக்கப் பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தன்னை போல் பலர் முன்னுக்கு வர வேண்டும். விளை யாட்டுத்துறையில் சாதிப்பதற்கு விடா முயற்சி முக்கியம். அதேபோல் நம்பிக்கை தான் மூலதனம், நிறைய கஷ்டங்களை தாண்டி தான் நான் இங்கு வந்துள்ளேன். என்னைப் போல் சேலத்தில் இருந்து நிறைய நடராஜன்கள் வர வேண்டும் என்றார்.  கிரிக்கெட் சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் ஆர். பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செயலா ளர் பாபு குமார், ஜே எஸ் டபிள்யூ சேர் மேனேஜர், ஏ.ஆர். ஹாரி ராஜ், துணைச் செயலாளர்கள் டாக்டர் ஆர். என் பாபா, முன்னாள் செயலாளர் ஆர். எஸ் ரங்கசாமி உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.

உலக புன்னகை தினம்

கோவை, அக்.5- உலக புன்னகை தினத்தையொட்டி, உதடு, அன்னப்பி ளவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கோவை ரயில் நிலையம் வண்ண விளக்குகளால் அலங்க ரிக்கப்பட்டது. கோவை மாவட்டம், கங்கா மருத்துவமனை மற்றும் அன்னப்பிளவு சீரமைப்பில் கவனம் செலுத்தும் தொண்டு நிறு வனமான ஸ்மைல் டிரெய்ன் இந்தியா ஆகியவை சார்பில்,  உலக புன்னகை தினம் கோவை ரயில் நிலையத்தில் வெள்ளி யன்று கொண்டாடப்பட்டது. ஸ்மைல் டிரெய்ன் இந்தியா நிறுவனத்தின் 25 ஆவது  ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையிலும், அன்னப்பிளவு, உதடு மற்றும் அன்னம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இதுபோல உள்ள குழந்தை களுக்கு சிகிச்சைகள் அளித்து அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்நி கழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சி யின் ஒரு பகுதியாக நீலகிரி மலை ரயில், கோவை ரயில்  நிலைய நுழைவாயில் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுவிஸ் இன்ஜின் பொருத்தப்பட்ட ரயில் உள்ளிட்ட இந்தியா  முழுவதும் உள்ள பல்வேறு பாரம்பரிய இடங்கள் வண்ண  விளக்குகளால் ஒளிர செய்யப்பட்டது.

பந்தலூரில் சாலையில் விழுந்த பாறை

உதகை, அக்.5- பந்தலூரில் மேடான பகுதியில் இருந்து உருண்டு வந்த  பாறைக்கல் சாலையின் குறுக்கே கிடப்பதால், அதை அகற்ற  பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே அரசு தேயிலை தோட் டம் டேன்டீ சரகம் 1 பகுதியில் ஏராளமான தேயிலை தோட்ட  குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் இலங்கை மறு வாழ்வு திட்டத்தின் கீழ் குடியமர்த்தப்பட்ட தாயகம் திரும் பிய தமிழ் மக்கள் கடந்த 40 ஆண்டுக்கு மேலாக வசித்து வரு கின்றனர். டேன் டீ நிறுவனம் உருவாக்கப்பட்ட காலத்தில் அந்த பகுதியில் போடப்பட்ட தார்சாலைகள் தற்போது பழு தடைந்து குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மேலும், கடந்த ஆண்டு பெய்த கனமழைக்கு நிலச்சரிவு ஏற்பட்டு சாலை கள் சேதமானது. பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண் டும் என அப்பகுதி பொதுமக்கள் பல ஆண்டு காலமாக சேரங் கோடு ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது வரை சாலை சீரமைக்காமல் உள்ளது.  மேலும், தற்போது மேடான பகுதியில் இருந்து உருண்டு வந்த  பாறைக்கல் சாலையின் குறுக்கே கிடப்பதால் ஆம்பு லன்ஸ் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று  வரமுடியாமல் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர். அதை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை  வேண்டும்.  குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க  வேண்டும். மேலும், அந்த பகுதியில் நடைபாதை, குடிநீர்,  தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.