districts

img

மத நல்லிணக்க இப்தார் நிகழ்வு

கோவை, மார்ச் 23- கோவையில் பழமையான பள்ளி வாசலில் இப்தார் நிகழ்வில், இந்து  மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்ற னர். கோவை மாவட்டம், ஓப்பணக்கார வீதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அத்தார் ஜமாத் பள்ளிவாச லில் ரமலான் மாதத்தை முன்னிட்டு சிறப்பு தொழுகைகளும், நோன்பு திறப்பு இப்தார் நிகழ்ச்சிகளும் நடை பெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதி யாக, சனியன்று மாலை நடைபெற்ற இப்தார் நிகழ்வில் இந்து சகோதரர்கள் ஒருங்கிணைந்து இஸ்லாமியர்களுக்கு விருந்து வழங்கினர். இந்நிகழ்வில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குறிப்பாக, பள்ளிவாசலுக்குள் வந்த இந்து மத குரு மார்கள் இஸ்லாமியர்களுடன் இணைந்து தொழுகையிலும் பங்கேற்ற னர். கோவை பேரூர் சாந்தலிங்கம் உமா பதி சிவம் தம்புரான் அடிகளார், மரக தம் அம்மையார், பாஸ்கரன் அடிக ளார் உள்ளிட்ட பல்வேறு இந்து மதத்தின ரும் கலந்து கொண்டு, இஸ்லாமியர் களுடன் தங்கள் அன்பைப் பகிர்ந்து கொண்டனர்.இது கோவையில் மத நல் லிணக்கத்தின் அடையாளமாக அமைந் ததாக பங்கேற்பாளர்கள் தெரிவித்த னர். அவிநாசி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில், அவிநாசி பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற் றது. ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். இணை ஒருங் கிணைப்பாளர் அப்துல் மஜீத் மம்முஷா முன்னிலை வகித்தார். மாவட்ட ஒருங் கிணைப்பாளர்கள் மோகன், ஈஸ்வ ரன், சிபிஎம் முன்னாள் ஒன்றிய கவுன்சி லர் பி.முத்துசாமி, திமுக பொன்னு சாமி, காங்கிரஸ் கோபாலகிருஷ்ணன், மதிமுக பாபு, தமுஎகச ஒன்றியச் செய லாளர் தினகரன், சிறுபான்மை நலக் குழு நிர்வாகி பாபு, நல்லது நண்பர் அறக்கட்டளை ரவிக்குமார் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.