districts

img

தடையின்மை சான்று கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

அவிநாசி, செப். 14 - சேவூரில் ஆதிதிராவிடர் நலத் துறை  சார்பில் வழங்கப்பட்ட நிலத்துக்கு தடை யின்மை சான்று கோரி அப்பகுதி மக்கள்  கிராம நிர்வாக அலுவலகத்தில் செவ் வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், சேவூர்  ஊராட்சி தேவேந்திர நகர், வெண்ணி காடு பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடி யிருப்புகளில் 500க்கும் மேற்பட்டோர்  வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் 1996  ஆம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில், இப்பகுதியைச் சேர்ந்த  மாதவி என்பவர் தன் வீட்டின் மீது வங்கிக்  கடன் பெறுவதற்காக நிலத்தின் மீதான  உரிமைச் சான்று வாங்குவதற்காக  கடந்த மாதம் அவிநாசி சார்பதிவாளர்  அலுவலகத்தில் விண்ணப்பித்துள் ளார்.

அவரது ஆவணங்களை சரி பார்த்த சார் பதிவாளர் குறிப்பிட்ட இடம்,  சென்னை வக்ஃபு வாரியத்துக்குச் சொந் தமானது எனவும், அந்நிலத்தை  வாங்கவோ, விற்கவோ கூடாது எனவும்  தெரிவித்துள்ளார். இதையடுத்து அப் பகுதி பொதுமக்கள் தடையில்லா சான்று கோரி சேவூர் கிராம நிர்வாக  அலுவலகத்துக்குச் சென்று போராட்டத் தில் ஈடுபட்டனர். சேவூர் காவல்துறை யினர், கிராம நிர்வாக அலுவலர் ராயப்பன், வருவாய் ஆய்வாளர் திவ்யா ஆகியோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன் பாடில்லாததால் மக்கள் காத்திருப்புப் போரட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவயிடத் திற்கு வந்த அவிநாசி வட்டாட்சியர் ராஜேஸ், ஆதிதிராவிடர் நலத் துறை  தனி வட்டாட்சியர் தனி வட்டாட்சியர்  தேவராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். இதில். 1996 க்கு முன்ன தாக. இஸ்லாமியர் பெயரில் இருந்த இந்த நிலம், அரசு மதிப்பீட்டில் பெறப் பட்டு, ஆதிதிராவிடர் நலத் துறை மூலம்  பொது மக்களுக்கு பட்டா வழங்கப்பட் டுள்ளது. இதற்கு பிறகு வக்ஃபு வாரியத் தினர் தங்களது ஆவணத்திலிருந்து, நில  பதிவை நீக்காமல் உள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம் எனத் தெரிவித் தனர். மேலும் இது தொடர்பான நகள் களை, பொதுமக்களிடம் வழங்கியதை டுத்து அனைவரும் கலைந்து சென்ற னர். இதனால் காலை முதல் மாலை வரை கிராம நிர்வாக அலுவலகம் முன் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.