districts

img

போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியதாக மாறிவிடக்கூடாது

கோவை, டிச.26- லண்டன் சென்று வந்ததற்கு பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை, சாட்டையால் அடித்துக் கொள் வேன், செருப்பு போட மாட்டேன்  என்கிறார். போராட்ட அறிவிப்புகள்  நகைப்புக்குரியதாக மாறிவிடக் கூடாது என தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திருமாவள வன் கோவை விமான நிலையத் தில் வியாழனன்று செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் மிகுந்த வேதனைக்குரி யது. இதில், தொடர்புடைய குற்ற வாளி உடனடியாக கைது செய்யப் பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கி றது. அந்த குற்றச்செயலில் தொடர் புடையவர்கள் வேறு யாராக இருந் தாலும் அனைவருமே கைது செய் யப்பட வேண்டும். இந்த விவகாரத் தில், அண்ணாமலை பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார். தமிழகத்தை பொறுத்தவரை அதி முக எதிர்க்கட்சி அல்ல பாஜக  தான் எதிர்க்கட்சி என்று காட்டு வதற்கு பெரிதும் அவர் முயற் சிக்கின்றார். எனவே, ஆளும் கட்சி யினர் மீது அவ்வப்போது குற்றம் சாட்டினால் தான் எதிர்க்கட்சித் தலைவராக ஆக முடியும் என்று  அவர் நம்புவதாக தெரிகிறது.  கைது செய்யப்பட்ட ஞானசேக ரன் அரசியல் கட்சித் தலைவர்களு டன் புகைப்படம் எடுத்திருக்கிறார் என்ற காரணத்தை கூறி அதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது அப்பட்டமான அரசி யல் ஆதாயம் தேடுவதே.  மேலும் சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு போடமாட் டேன் என அண்ணாமலையின் அறி விப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணாமலை லண்டன் போய் வந்த பிறகு என்ன ஆனது என்று  தெரியவில்லை. அவர் ஏன் இப் படிப்பட்ட முடிவை எல்லாம் எடுக்கி றார் இது வருத்தம் அளிக்கிறது. தன்னைத் தானே வருத்திக் கொள் ளும் அகிம்சா வழி முறை என்பது  காந்தியடிகளைப் போல கையில்  எடுக்கிறாரா என்று தெரியவில்லை.  ஆனால், காந்தியடிகள் கூட இப்ப டிப்பட்ட போராட்டங்களை அறி வித்தது இல்லை. அவருடைய போராட்ட அறிவிப்புகள் நகைப் புக்குரியதாக மாறிவிடக்கூடாது. அண்ணா பல்கலைக்கழக விவகா ரத்தில் மாணவியின் விவரங்கள்  வெளிவந்திருக்கக் கூடாது. அது  ஏற்புடையது அல்ல கண்டனத் திற்குரியது. சிறுபான்மையினருக் கான ஒரே தலைவர் மோடி தான் என்று அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு, இது தான் 21 ஆம் நூற்றாண்டில் மிகச் சிறந்த நகைச்சுவை என்றார்.