districts

img

காட்டுத்தீ பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் துளிர்விடும் செடிகள்! - - எம்.பிரபாகரன் -

நாமக்கல், மே 18- - எம்.பிரபாகரன் - கொல்லிமலை பகுதியில் காட் டுத்தீ ஏற்பட்ட இடங்களில் தற்போது மழை காரணமாக செடி, கொடிகள் துளிர்விடுவதால் இயற்கை ஆர்வ லர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக கொல்லி மலை உள்ளது. கொல்லிமலையில் விளையும் மிளகு மிகவும் காரத் தன்மை கொண்டதாகவும், ருசி  கொண்டதாகவும் உள்ளது. மேலும், அன்னாசி பழம், பலாப்பழம், தேன் மற்றும் கொல்லிமலையில் மட் டுமே கிடைக்கக்கூடிய சில குறிப் பிட்ட பழ வகைகள், மூலிகை மரங் கள், கொல்லிமலை முழுவதும் பர வலாக உள்ளது. முக்கிய அருவிக ளாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அருவி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளிட்ட பிரதான அருவிகளும், சிற்றருவிகளும் உள்ளன. மிகக்கு றைந்த செலவில் சிறப்பானதொரு சுற்றுலாவை மேற்கொள்ளும் வகையில் கொல்லிமலை உள்ள தால், அனைத்து தரப்பினரும் அதி கம் விரும்பி வரக்கூடிய ஒரு சுற்று லாத்தலம் என்றால் அது கொல்லிம லையை குறிப்பிட்டு சொல்லலாம். மேலும் ஆந்திரா, கேரளம், கர்நா டகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களில் இருந்தும் கொல்லிமலைக்கு சுற்றுலா வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாத இறுதி வாரத் தில் தமிழகம் முழுவதும் 105 டிகி ரிக்கு மேலே வெயில் கொளுத்தி யது. இதில் இந்தியாவில் அதிகம் வெயில் கொளுத்தும் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தின் மிக அரு கில் உள்ள ஈரோடு மாவட்டம் இருந் தது மிகப்பெரிய ஆச்சரியத்தை யும், அதிர்ச்சியும் பொதுமக்களுக்கு ஏற்படுத்தியது. இத்தகைய நிலை யில் கொல்லிமலை சுற்றிலும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலப் பரப்புகள், மூலிகை மரங்கள் செடி, கொடிகள் தாவரங்கள் உள்ள நிலை யில், கோடை வெப்பத்தின் தாக் கத்தை தாங்க முடியாமல் கொல்லி மலையின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே காட்டுத்தீ பரவியது.  இதன் காரணமாக பல நூற்றுக் கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் தீக்கிரையாகின. இந்த நிலை தொடருமோ என  கொல்லிமலை வாழ் பொதுமக்க ளும், வனத்துறையினரும், சமூக ஆர்வலர்களும் கவலையுடன் இருந்த நிலையில், வெயில் தாக் கம் சற்றே குறைய தொடங்கியது. மேலும் மே மாத துவக்கத்தில் கொல்லிமலையின் ஒரு சில இடங் களில் சிறிய அளவிலான காட்டுக்கு ஏற்பட்ட நிலையில், மே 10 ஆம் தேதிக்கு பிறகு நிலைமை மாறி தமிழ்நாடு முழுவதும் காலநிலை மாறியதால், மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. நாமக்கல்லிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரத்தில் கனமழை கொட்டி வருகிறது.  கொல்லிமலை அருவிகளில் நீரின்றி வறண்டு போய் இருந்த நிலையில், தற்போது தொடர்மழை காரணமாக அருவிகளில் நீர் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், காட்டுத்தீயினால் வெட்ட வெளி யாக இருந்த இடங்கள் தற்போது சிறிய அளவிலான செடிகள் துளிர் விட்டு பச்சை பசேலென காணப் படுகிறது. தொடர்ந்து கொல்லி மலை ஒன்றியத்தின் பல்வேறு பகு திகளில் காட்டுத்தீ ஏற்பட்ட பல இடங்களில் தற்போது மெல்ல செடி கள் முளைத்து இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால், கொல்லிமலை வாழ் மக்களும், இயற்கை ஆர்வலர் களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இயற்கை எத்தகைய பேரழிவை ஏற்படுத்தினாலும் அது மீண்டும் தன்னை நிலைப்படுத்திக் கொள் ளும். அவ்வாறே இத்தகைய சம்ப வம் நடைபெற்றுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளத் தில் கொல்லிமலை காட்டுத்தீ ஏற் பட்ட படத்தையும் தற்போது செடி கள் முளைக்கும் படத்தையும் பகிர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.