districts

img

தருமபுரி சர்க்கரை ஆலையில் அரவையை துவக்கிடுக

தருமபுரி, டிச.3- சர்க்கரை ஆலையை திறந்து உடன டியாக கரும்பு அரவையை துவக்க வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோட் டில் தருமபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. இந்த சர்க் கரை ஆலைக்கு தருமபுரி, காரிமங்க லம், பாலக்கோடு, ராயக்கோட்டை, பென்னாகரம் உள்ளிட்ட பல்வேறு பகு திகளில் இருந்து கரும்பு அரவைக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தரும புரி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்க வில்லை. இதனால் இப்பகுதியில் கரும்பு விளைவிக்கும் விவசாயி களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட் டது. தற்போது ஓரளவு மழை பெய்துள் ளதால், கரும்பு விளைச்சல் அதிக மாக உள்ளது.  எனவே, கரும்பு விவசாயிகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு நம் பிக்கை ஏற்படுத்தவும் 2021-2022 ஆம்  ஆண்டுக்கான கரும்பு அரவையை உடனடியாக துவக்க வேண்டும்.

ஆலையில் இணை மின்சார உற்பத்தி திட்ட பணிகளை முடித்து செயல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க  மாநில பொதுச்செயலாளர் டி.ரவிந் திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட தலைவர் கே.என்.மல்லை யன், மாவட்டசெயலாளர் சோ.அரு சுணன், ஆர்.சின்னசாமி, அன்பு, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், பி.பி.ராஜா உள்ளிட்டோர் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர்  அனிதாவிடம் மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தருமபுரி சர்க்கரை ஆலையில் நடப்பு  ஆண்டு அரவை பணிகளை துவக்க  ஆணையர் உத்தரவு படி ஆலையை சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வரு கிறது. ஆலையில் இந்த ஆண்டு அரவை உறுதியாக துவங்கப்படும் என தெரிவித்தார்.