districts

img

தசைசிதைவு நோய்க்கு சிகிச்சை அளிக்க நிரந்தர வரிவிலக்கு

தருமபுரி, டிச.2- தசைசிதைவு நோயினால் பாதிக் கப்படும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வரியை குறைத்து நிரந்தர மாக வரிவிலக்கு அளிக்க வேண்டும்  என தருமபுரி எம்.பி., செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார். தருமபுரி நாடாளுமன்ற உறுப்பி னர் மருத்துவர் செந்தில்குமார், நாடாளுமன்றத்தில் தசை சிதைவு என்ற அரிய வகை மரபணு நோய் குறித்து அவையின் கவ னத்தை ஈர்க்க உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தசை சிதைவு நோயினால் 3,500க்கும் மேற்பட்ட குழந் தைகள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, முதுகு தண்டுவடதசை நார் சிதைவு நோயினால் 800  குழந் தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ள னர். நோயினால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இரண்டு வய திற்கு முன்பே மரபணு பரிமாற்ற சிகிச்சைக்கான ஊசி, மருந்துகள் செலுத்தப்பட வேண்டும். சிகிச்சை  எடுக்கவில்லை என்றால் அக்குழந் தையை இழக்க அதிக வாய்ப்புள்ளது.  

இந்த சிகிச்சைக்கு தேவையான ஊசி மருந்துகளின் விலை 16 கோடி ஆகும்.  இத்தகைய விலை  அதிகமான மருந்துகளை வாங்க  பெற்றோர்களுக்கு சாத்தியக்கூறு கள் குறைவு. பொற்றோர்கள் நிதி திரட்ட உள்ள ஒரே வழி, திறல் நிதி  திரட்டல் (கிரவுட் ஃபண்டிங்) அனை வராலும் பணத்தை சேர்த்து சிகிச்சை அளிக்க முடியாது.  கிரவுட் ஃபண்டிங்கில் நிதியினை திரட்டினா லும் ரூ. 4 கோடி ஜிஎஸ்டி மற்றும் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், மத்திய நிதி அமைச்சருக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என கடிதம் எழுதினார்.   வரிவிலக்கு அங்கொன்றும் இங் கொன்றுமாக இல்லாமல் நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். இத னால் எல்லோருக்கும் மலிவு விலை யில் மருந்துகள் கிடைக்கும்.  இந்திய  அரசியலமைப்பு சட்டத்தில் அடிப் படை உரிமை சரத்து 21ல் சுகாதார மற்றும் ஆரோக்கியமாக வாழ உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. உடன்படிக்கைக்கு இணையான இந்திய காப்புரிமை சட்டத்தின்கீழ் கட்டாய உரிமை மருந்துகளின் விலையை வரம்புக்குள் உட்படுத்து வதும், வர்த்தக விலை சீரமைப்பு  மூலம் தசை சிதைவு நோய்களுக் கும் மருந்து அனைவருக்கும் மலி வான விலையில் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு செந் தில்குமார் எம்.பி., பேசினார்.