நாமக்கல், செப்.15- அரசு ஊழியர் குடும்பத்திற்கும் சட்டத்திற்கு புறம்பாக வழங்கிய பட் டாக்களை ரத்து செய்து, பட்டா வழங்கிய அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டுமென நாமக் கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே மல்லசமுத்திரம் ஒன் றியம் மரப்பரை கிராமம் தென்ன மரத்துபாளையத்தில் அரசு புறம் போக்கு (கிராம நத்தம் சர்வே எண். 364,363,362,361,45) நிலத்தை விவ சாய நிலம் வைத்திருப்பவர்களுக் கும், காவல்துறையில் பணியாற்றும் குடும்பத்திற்கும், திருமணம் ஆகாத வருக்கும் ஒரே ரேசன்கார்டில் 2 பட்டா கள் என புறம்போக்கு நிலத்தில் 13 இலவச பட்டாக்கள் வழங்கப்பட்டுள் ளது. இந்த பட்டாக்கள் 2018ஆம் முதல் 2021ஆம் ஆண்டில் வழங்கப் பட்டுள்ளது. இதனை ரத்து செய்து நிலம் இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும். சட்டவிதிகளை கடைபிடிக்காமல் பட்டாக்கள் வழங் கிய வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எலச்சி பாளையம் கிழக்கு ஒன்றிய செயலா ளர் வீ.தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அசோகன், எலச்சிபாளையம் ஒன் றிய கவுன்சிலர் சு.சுரேஷ், ஏளூர் வார்டு உறுப்பினர் ஜோதி, மாவட்ட குழு உறுப்பினர் ஜீ.பழனியம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர். ரமேஷ், ஆர்.துரைசாமி, வீ.விஜய் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.