districts

img

அரசு மருத்துவமனைகளில் பிரசவ இலக்கு நிர்ணயித்ததை கைவிட செவிலியர்கள் கோரிக்கை

தஞ்சாவூர், நவ.11- தமிழ்நாடு அரசு அனை த்து சுகாதார செவிலியர் சங் கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற் றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செய லாளர் எஸ்.ராணி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கே.சித்ரா வர வேற்றார். மாநிலத் தலை வர் ஆர்.இந்திரா சிறப்புரை யாற்றினார். மாவட்ட பொரு ளாளர் என்.சீதாலட்சுமி, துணைத் தலைவர்கள் சி.சிவ பாக்கியம், எல்.காந்திமதி, சி.ஜெயந்தி, டி.சிவகாம சுந்தரி, மாவட்ட இணை செய லாளர்கள் எஸ்.சித்ரா, எஸ்.சந்தியா, எஸ்.சுதா ஆகி யோர் முன்னிலை வகித்த னர். கூட்டத்தில், கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்க ளுக்கு மாலை 5 மணிக்கு மேல் துணை இயக்குநர் அலுவல கங்களில் ஆய்வு கூட்டங்க ளை நடத்தக் கூடாது. இந்த கூட்டம் இரவு 9 மணி வரை நீடிப்பதால் பல்வேறு இன் னல்களுக்கு சுகாதார செவி லியர்கள் ஆளாகின்றனர். கிராமப்புறத்தில் பெண் கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் பிரச விப்பது அவரவர் உரிமை, ஆனால் அவர்களை அரசு மருத்துவமனைகளில் தான் பிரசவிக்க வேண்டும் என நிர்பந்தம் செய்து, அதற்கு கிராமப்புற சுகாதார செவிலி யர்களுக்கு இலக்கு நிர்ண யிக்கும் தன்மையை கைவிட வேண்டும். கிராம சுகாதார செவிலி யர்கள், பகுதி சுகாதார செவி லியர்களுக்கு துணை சுகாதார நிலையத்தில் மட்டுமே பணி வழங்க வேண்டும், ஆனால் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், மருத்துவமனை களில் பணியாற்ற நிர்ப்பந்தம் செய்யக்கூடாது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலி யர்கள் கலந்து கொண்டனர்.