districts

img

மாற்று இடம் கொடுக்காமல் வீட்டை காலி செய்ய சொல்வதா?

உதகை, செப்.13- “குடியிருக்க லாயக்கற்றது காலி செய்யுங்கள்” என அறிவுறுத்துகிற நிர்வாகம் மாற்று இடம் கொடுக்கா மல் தராமல் இருப்பது நியாயமா? என நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியினர் கேள்வி எழுப்பி,  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் நக ராட்சி, 20 ஆவது வார்டில் கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் பெய்த  மழையில் 9 வீடுகள் முற்றிலும் பாதிக் கப்பட்டது. அங்கே குடியிருக்கக் கூடாது என்று புவியியல் ஆய்வாளர் களும், வருவாய்த்துறை அதிகாரி களும் கூறி சென்று விட்டனர். ஆனால், கோட்டாட்சியர், வட்டாட்சியர் தற் போது வரை மாற்று இடம் தர வில்லை. இதனிடையே அரசுக்கு சொந்தமாக 125 சென்ட் நிலம் உள் ளது. 1061 சர்வே எண்ணில் உள்ள  இந்த நிலம் வழங்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், பெரிய ஆபத்தான வீட்டில்தான் மேற் படி 9 குடும்பவும் இரவு தங்க வேண்டி  உள்ளது. பச்சிளம் குழந்தைகள், வய தானவர்கள், நோயாளிகள், கர்ப்பி ணிகள் ஆகியோர் பாதுகாப்பற்ற நிலை யில், இந்த வீடுகளில் வேறு வழி இல் லாமல் இரவு தங்குகிறார்கள்.  எப்போது வேண்டுமானலும் இடி யும் நிலையில் வீடுகள் உள்ளன. ஏற் கனவே, இரண்டு வீடுகள் இடிந்து விழுந்துவிட்டது. தற்போதும், மழை கடுமையாக உள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மாற்று இடம் வழங்க வேண்டும். தேர்தெடுத்த மக் கள் பிரதிநிதிகளை அவமானப்படுத் தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கட்சியினர் கூடலூர் வட் டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு கூடலூர் ஏரியா கமிட்டி செயலாளர் சி.கே.மணி தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் என்.வாசு உட்பட அப்பகுதி பொதுமக்கள் திரளா னோர் கலந்துகொண்டனர்.