districts

இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தல்

தருமபுரி, ஜூலை 15- தருமபுரி மாவட்டத்தில் 1,165 தொடக்க,  நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி  செல்லாத, இடையில் நின்ற குழந்தைகளை  கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண் டும் என முதன்மை கல்வி அலுவலர் குண சேகரன் தெரிவித்தார். தருமபுரி மாவட்டத்தில் தொடக்க, நடு நிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 1,607 பள்ளிகள் உள்ளன. இதில் தருமபுரி, அரூர் தொடக்க கல்வி  மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளி கள் 1,165 உள்ளன. சுமார் 1 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். தருமபுரி தொடக் கக்கல்வி மாவட்டத்தில் மட்டும் 647 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும், அரூர் தொடக்கக் கல்வி மாவட்டத்தில் 518 தொடக்க, நடு நிலைப்பள்ளிகளும் உள்ளன. அரசுப்பள்ளி களில் இடையில் நின்ற மாணவர்களை கண்ட றிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க பள்ளி  கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகி றது. இதுவரை பள்ளியில் இடையில் நின்ற  11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 200 பேர்  சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள மாணவர் களை சேர்க்கும் பணியில் பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அரசுப்பள்ளிகளில் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 1165 தொடக்க, நடுநிலைப்பள்ளியில் ஜூலை மாதத் திற்கான பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத் தில் முக்கிய அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு செய்வது, தொடர்ந்து உயர்கல்வி வரை படிக்க வழிகாட்டுவது,

இடையில் நின்ற மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது. தரும புரி நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடை பெற்ற பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசு கையில், பள்ளிகளின் வளர்ச்சியில் மேலாண் மைக்குழு உறுப்பினர்களின் பங்குகள் மற் றும் கடமைகள் அதிகம் உள்ளன. அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் அங்கு படித்த முன் னாள் மாணவர்களை பங்குபெறச் செய்ய  வேண்டும். இதற்காக பள்ளிக்கல்வித்துறை யால் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://nammaschool.tnschools.gov.in  என்ற இணையதளத்தில் அரசுப்பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், தங்கள் விவ ரங்களை பதிவு செய்து, முன்னாள் மாணவர் கள் மன்றத்தில் இணைய வேண்டும். அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக தமிழக அரசு மற்றும் பள்ளி கல்வித்துறை எடுத்து வரும்  முயற்சிகளுக்கு பக்க பலமாக இருக்க வேண் டும். மேலும், பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற குழந்தைகளை கண்டறிந்து, மீண்டும்  பள்ளியில் சேர்க்க வேண்டும். இல்லம் தேடிக் கல்வி, 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்க ளின் கற்றல் அளவை மேம்படுத்த அறிமுகப் படுத்தப்பட்டு உள்ள எண்ணும் எழுத்தும் திட் டம் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான செயல்பாடுகள் குறித்த  விழிப்புணர்வை மேலாண்மைக்குழு உறுப்பி னர்கள் ஏற்படுத்த வேண்டும், என்றார்.