districts

img

மணிப்பூரில் அமைதியை நிலை நாட்ட கோரி மனித சங்கிலி

கோவை, ஜூலை 10- மணிப்பூர் மாநிலத்தில் பாஜகவின் திட்டமிட்ட வன்முறையால் பாதிக்கப் பட்ட பழங்குடியின மக்களை பாது காக்க வேண்டும். அங்கு அமைதி திரும்ப ஒன்றிய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் மனித சங்கிலி  போராட்டம் நடைபெற்றது. இதில், மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற  உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ப ராயன் ஆகியோர் பங்கேற்றனர்.  மணிப்பூர் மாநிலத்தில், பழங்குடி யின மக்கள் மீது கடந்த 60 நாட்களாக வன்முறை தாக்குதல் நடத்தப் பட்டு வருகிறது. 50 ஆயிரத்துக்கும் மேற் பட்ட மக்கள் முகாம்களில் தங்கி உள்ள னர். உயிரிழப்புகள், தீ வைப்பு சம்பவங் கள் தொடர்ந்து நடைபெறுகிறது.  பாஜக வின் குறுகிய அரசியல் நோக்கங்களுக் காக பரப்பப்படும் வெறுப்பு பிரச்சாரம் இந்த வன்முறைக்கு அடிப்படையாக உள்ளது என்பதை அரசியல் நோக்கர் கள் அறுதியிட்டு கூறி வருகின்றனர்.  நாடு முழுவதும் மணிப்பூர் மாநிலத் தில் அமைதி திரும்ப வேண்டும் என் கிற கோரிக்கை நாடு முழுவதும் வலுத்து வருகிறது. இதன்ஒருபகுதியாக வெறுப்பு அரசியல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தி  மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நல்லாட்டிட வேண்டும் என வலியுறுத்தி கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார் பில் மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது.  கோவை தெற்கு தாசில்தார் அலுவ லகம் முன்பு பி.ஆர்.நடராஜன் தலைமை யில் நடைபெற்ற மனித சங்கிலி போராட் டத்தில், திருப்பூர் நாடாளுமன்ற உறுப் பினர் கே.சுப்பராயன், தபெதிக பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் மற்றும்  பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர் கள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகி கள் பங்கேற்று உரையாற்றினர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.