districts

img

விவசாய நிலத்தை சேதப்படுத்தும் குதிரைகள்

நாமக்கல், செப். 8- தெருவோரம் சுற்றித்திரிகிற குதிரைகள் விவசாய நிலத் திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துவதாக விவசாயிகள் கவ லையை வெளிப்படுத்தியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குப்பண்டாபாளை யம் ஊராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக அளவு  விவசாய நிலங்கள் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் பல் வேறு வகையான பயிர்களையும், தானியங்களையும் விவ சாய நிலங்களில் விளைவித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்களாக குதிரைகளின் நடமாட்டம் அதிக மாக இருப்பதால் விவசாய நிலங்கள் பாதிப்படைவ தாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த வாரத்தில்  கிருஷ்ணமூர்த்தி என்பவரின் நெல் நாற்றங்கால்களில் நெல்  நாற்று பயிரை குதிரைகள் மேய்ந்ததால், மீண்டும் பயிர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும் ஒரு மாத காலம் கடந்து தான் நடவு செய்ய முடியும் என்பதாலும், அதற்குள்ளா கவே மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்காலில் தண்ணீர் நிறுத் தப்படும் சூழல் உள்ளதால், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், விலங்குகள் வதை தடுப்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்து  விவசாய நிலங்களை பாழ்படுத்தி வரும் குதிரைகளை பிடிக்க  உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், ஒரு வேளை குதிரைகளுக்கு உரிமையாளர்கள் இருக்கும் பட்சத் தில் அவர்களுக்கு உரிய முறையில் குதிரைகளை வளர்க்க  அறிவுரை வழங்க வேண்டும்  என்பது விவசாயிகளின் கோரிக் கையாக உள்ளது.