நாமக்கல், டிச.3- அனைவரும் பயன்பெரும் வகையிலான ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தழ்நாடு அரசு ஓய்வூதியர் கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார் பில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைவரும் பயன் பெறும் வகையில் போக்குவரத்து ஓய்வூதிய திட்டத்தை மாற்றி அமைத்திட வேண்டும். 70-வயது நிறைந்த அனைத்து ஓய்வூதியர்க ளுக்கு கூடுதல் 10 சதம் ஓய்வூதி யம் வழங்கிடவும், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7,850/- வழங்க வேண்டும். நீதிமன்றம் தீர்ப்பு வழங் கிய பின்னரும் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 2015 முதல் வழங்காமல் முடக்கி வைக்கப் பட்டுள்ள அகவிலைப்படியை உட னடியாக வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றது. நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் செவ்வாயன்று நடை பெற்ற தர்ணாவிற்கு ஓய்வு பெற்ற சங்கங்களின் மாவட்டத் தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். இதில், நூற்றுக்கணக்கான ஓய்வூ தியர்கள் பங்கேற்றனர். கோவை கோவை சிவானந்த காலனி யில் நடைபெற்ற தர்ணாவிற்கு, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங் களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் பி.சுரேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.அருணகிரி வரவேற்றார். இதில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர். எஸ்.மதன், மாநில துணைத் தலைவர் என்.அரங்கநா தன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில், ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் சி.வி.மீனாட்சி சுந்தரம், ஆர்.சேதுராமன், எஸ்.என்.மாணிக் கம் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர். முடிவில், எம்.எட்வர்ட் நன்றி கூறினார். ஈரோடு இதேபோன்று தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்ட மைப்பினர் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடை பெற்ற தர்ணாவிற்கு, மாவட்டச் செயலாளர் வ.பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் நா.மணிபா ரதி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மேனாள் மாநிலத் தலைவர் கே.ராஜ்குமார் தொடக்க உரையாற்றினார். துறைவாரியான சங்கங்களின் ஓய்வு பெற்றோர் அமைப்பின் நிர்வாகிகள் பேசி னர். முடிவில் கூட்டமைப்பின் பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணி யன் நன்றி கூறினார்.