ஒன்றிய பட்ஜெட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
சேலம், பிப்.8- ஒன்றிய பட்ஜெட்டைக் கண்டித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியினர் சனியன்று போராட்டத்தில் ஈடுபட்ட னர். ஏழை, எளிய, நடுத்தர மற்றும் விவசாயத் தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இத னைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சனி யன்று மாநிலம் தழுவிய பட்ஜெட் நகல் எரிப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்டேட் பேங்க் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ. மோகன் தலைமை வகித்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோன்று, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.
லைட்டர் வெடித்து தொழிலாளி பலி
கோவை, பிப்.8- போத்தனூர் அருகே சிகரெட் லைட்டர் வெடித்து தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவை மாவட்டம், போத்தனூர் வண்ணார பேட்டை வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (66). இவர் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந் நிலையில் ராஜேந்திரன் கடந்த பிப்.1 ஆம் தேதியன்று வீட்டில் இருந்த போது, லைட்டர் கொண்டு சிகரெட் பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது லைட்டர் வெடித்து எரிபொருள் உடல் மீது பட்டு தீப்பிடித்தது. இதில் உடலில் சுமார் 70 சதவீதம் தீக்காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரன் வெள்ளியன்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணிப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த சமூக தணிக்கை அலுவலர்கள் வலியுறுத்தல்
சேலம், பிப்.8- பணிப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும், என சமூக தணிக்கை அலுவலர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. தமிழ்நாடு சமூக தணிக்கை அலுவலர் சங்கத்தின் மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம், சேலத் தில் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், மத்திய அரசின் சார்பில், தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட் டம் உள்ளிட்ட திட்டங்களில், ‘சமூக தணிக்கைக் குழு’ என்ற பெயரில் 500க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணி யாற்றி வருகின்றனர். கடந்த பத்து ஆண்டுகளாக பணி யாற்றும் அவர்களுக்கு உரிய பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும். திட்டங்களுக்கு கூடுதல் நிதியை ஒதுக்கி, ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்றார் போல், தங்களின் ஊதிய மாற்றத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
பூட்டிய வீட்டில் நகை கொள்ளை: 2 பேர் கைது
நாமக்கல், பிப்.8- ராசிபுரம் அருகே ஓய்வுபெற்ற தீயணைப் புத்துறை அலுவலரின் வீட்டிலிருந்து நகை களை கொள்ளையடித்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், மேட்டு தெருவைச் சேர்ந்தவர் அழகப்பன். தீய ணைப்புத் துறையில் மாவட்ட அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சுப்புலட்சுமி அரசுப்பள்ளியில் ஆசி ரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலை யில், கடந்தாண்டு ஜூன் 19 ஆம் தேதியன்று, வீட்டை பூட்டி விட்டு தனது மகளை மருத்து வக்கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்னைக்கு சென்றுள்ளார். மறுநாள் அவர் வீட்டில் வேலை பார்க்கும் பெண் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீடு முழுவதும் மிளகாய்ப்பொடி தூவப்பட்டி ருந்தது. மேலும், வீட்டில் உள்ள பீரோவி லிருந்த சுமார் 35 சவரன் நகை மற்றும் அவ ரது வீட்டிலிருந்த இருசக்கர வாகனம் ஆகி யவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறித்து, வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து வீட்டின் உரிமையா ளர் அழகப்பன் கொடுத்த புகாரின் பேரில், ராசிபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந் நிலையில், புதுக்கோட்டையில் இதே போல கொள்ளை நடந்த சம்பவம் பற்றி தகவலறிந்து அங்கு சென்ற ராசிபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதன்பின் நீதிமன் றத்தில் இருந்து குற்றவாளிகளை வெளியில் எடுத்து விசாரணைக்கு ராசிபுரம் அழைத்து வந்தனர். விசாரணையில், இருவரும் திண் டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் (31) மற்றும் மதுரை மாவட்டம், காளவாசல் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (33) என்ப தும், ராசிபுரம் நகரில் அழகப்பன் வீட்டிலும் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த 25 சவரன் தங்க நகைகளை மீட்டு, நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
சேலம், பிப்.8- ஓமலூர் அருகே மாணவியை புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை அளித்த ஆசிரி யர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து சேலம் முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள அரசுப்பள்ளியில், ஈரோடு மாவட்டம், சாஸ் திரி நகரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணி யாற்றி வந்தார். இந்நிலையில், அவரிடம் படிக்கும் ஒரு மாணவியை சிவகுமார் புகைப் படம் எடுத்து, அதனை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந் துப்போன மாணவி, ஆசிரியரின் செல்போனை பிடுங்கி, புகைப்படங்களை அழித்ததுடன், நடந்த சம்பவம் குறித்து தலைமையசிரிய ரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து தலைமை ஆசிரியர் 1098க்கு தகவல் தெரிவித் தார். சைல்டு லைன் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை செய்து, தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் சிவகுமார் மீது ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த னர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் சிவகுமாரை கைது செய்து, சேலம் மகிளா நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதனைத்தொ டர்ந்து சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர், சம்பந்தப்பட்ட ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கனிமவளக்கொள்ளை: சிறப்பு புலனாய்வுக் குழு ஆய்வு
கோவை, பிப்.8- பேரூர் அருகே முறைகேடாக மண் வெட்டி எடுத்த பகுதிகளில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டனர். கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளை மூடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டது. அதேபோல் பேரூர் தாலுகா, ஆலாந்துறை வெள்ளி மலை பட்டினம் உள்ளிட்ட கிராமங்க ளில் சட்ட விரோதமாக மண் எடுக்கப் படுவதாக சமூக ஆர்வலர் சிவா மற் றும் லோகநாதன் ஆகியோர் நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதை நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு விசாரணை செய்தது. சட்ட விரோதமாக மண் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி சென்னை மாநில குற்ற ஆவண காப்பக காவல்துறை கண்காணிப்பா ளர் நாகஜோதி, ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப் பாளர் ஷசாங் சாய் ஆகியோர் அடங் கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்நிலையில் சிறப்பு புலனாய்வுக் குழுவில் நியமிக்கப்பட்ட காவல் கண் காணிப்பாளர் ஷசாங் சாய் ஒருங்கி ணைந்த குற்றப்புலனாய்வு பிரிவில் பணியாற்றி வருவதால், சிறப்பு புல னாய்வுக் குழுவில் நீடிக்க இயலாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட் டது. இதனால், சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்து அவர் விடுவிக்கப் பட்டார். இதை அடுத்து காவல் கண் காணிப்பாளர் நாகஜோதி தலைமை யிலான சிறப்பு புலனாய்வுக் குழுவி னர் பேரூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் முறைகேடாக மண் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அவர்கள் முதற் கட்டமாக வெள்ளருக்கம்பபாளை யம், நரசிபுரம் பகுதிகளில் மண் கொள்ளை அடிக்கப்பட்ட இடங்க ளில் மற்றும் செங்கல் சூளை பகுதி களில் சனியன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் சம்பந்தப் பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப் பட்ட நபர்களை அழைத்து விசா ரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழுவினர் பல்வேறு கட்டமாக மூன்று மாதங்கள் வரை ஆய்வுகளை மேற்கொள்ளதாக காவல் துறையி னர் தெரிவித்துள்ளனர்.
சிறார் இலக்கியத் திருவிழா 2025
சிறார் இலக்கியத் திருவிழா 2025 திருப்பூர், பிப். 8 – திருப்பூர் கூத்தம்பாளையம் முருகு மெட்ரிக் பள்ளியில் சனியன்று சிறார் இலக்கியத் திருவிழா 2025 நடைபெற்றது. கல்வியாளர் சசிகலா பசுபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கதை சொல்லிகள் நான்சி கோமகன், சரிதா ஜோ, சுப்ரபாரதிமணியன், அழகுபாண்டி அரசப்பன், ஆனந்த குமார் பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிறார் ஓவியக் கண்காட்சியை பெற்றோர் ஆசிரியர் சங்க அலமேலு திறந்து வைத்தார். சிறார் நூல்கள் கண்காட்சியை மூத்த எழுத்தாளர் மதுராந்தகன் திறந்து வைத்தார். முதல் விற்பனையை கிரிஜா சுப்ரமணியன், பாக்யலட்சுமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சிறாரின் கதை சொல்லல் (ஆங்கி லம்/தமிழ்) நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் பங் கேற்றனர். சிறார் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கல்வியாளர் பசு பதி, சமூகப் பணியாளர்கள் ஸ்டார் குமார், லீலா ஜகன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழாசிரியர் மோகன்ராஜ் மனோகரன் நன்றி கூறினார். கனவு இலக்கிய அமைப்பு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தது.
மனைவி தற்கொலை செய்த நிலையில் கணவனும் தற்கொலை
உடுமலை, பிப்.8- உடுமலை அருகே வீட்டில் தூக்கிட்டு இறந்த இளம்பெண் பிரேத பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இளம் பெண்ணின் கணவர் அரசு மருத்துவமனை மின் அறை யில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உடு மலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை ராகல்பாவி அருகே உள்ள ஆர்.கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (33), அவரது மனைவி அபிநயா (29). இவர்களுக்கு, 9 வயதில் பெண் குழந்தை, 6 வயதில் ஆண் குழந்தை என இரு குழந்தை கள் உள்ளனர். செல்வராஜ் பட்டுக்கோட்டையில் தனியார் கோழிப்பண்ணையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், அவர் பட்டுக்கோட்டையில் இருந்து விடுமு றையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். சனியன்று காலை அவரது மனைவி அபிநயா வீட்டில் தூக்கு போட்டு இறந்த நிலையில், அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோத னைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந் துள்ளனர். அங்கு இருந்த கணவர் செல்வராஜ், அரசு மருத்து வமனையில் உள்ள மின் அறையில் மின் ஒயர்களை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியும், கண வனும் அடுத்ததடுத்து தூக்கிட்டு இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உடுமலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
பிப்.11 இல் வள்ளலார் நினைவு தினம் மதுபானக் கடையை மூட உத்தரவு
திருப்பூர், பிப். 8 – திருப்பூர் மாவட்டத்தில் பிப்ரவரி 11 செவ்வாயன்று வள்ள லார் நினைவு நாளை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடை களை மூட மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உத்தர விட்டுள்ளார். டாஸ்மாக்கின் கீழ் இயங்கும் மதுபானக் கடைகள், அவற் றுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், மனமகிழ் மன்றங் கள், உணவு விடுதியுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவை அன்று நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபான விற்பனை நிறுத்தப்பட வேண்டும். மீறினால் உரிய சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் எச்சரித்துள் ளார்.
மூளைச்சாவு அடைந்தவர் உடலுறுப்புகள் தானம்: அவிநாசி மக்கள் அஞ்சலி
அவிநாசி, பிப். 8 – விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில் அந்த வாலிபரின் உடலுக்கு அவிநாசி புதிய பேருந்து நிலையம் முன்பு சனியன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. செங்கப்பள்ளி அருகே கடந்த வியாழனன்று நடந்த பேருந்து விபத்தில் மாரிமுத்து, அனிதா ராணி ஆகியோரின் மகன் குருராஜ் படுகாயம் அடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தாலும் பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில் இவருடைய கண், இதயம், கிட்னி, உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. குருராஜின் உடல் கூராய்வு செய்யப்பட்டு அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அவிநாசி வழியாக செல்லும்போது, அப்பகுதியைச் சேர்ந்த ரோட்டரி சங்கத்தி னர், சமூக பொது நல அமைப்புகள் உள்ளிட்டோர் அவரது உட லுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். குருராஜின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். இதில் அவிநாசி கிழக்கு ரோட்டரி சங்கத்தலைவர் பிரகாஷ், செயலாளர் சரவணன், முன்னாள் தலைவர் சிவகுமார், வணிகர் சங்க நிர்வாகி முத்துக் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவிகளிடம் பாலியல் சீண்டல் போக்சோவில் ஆசிரியர் கைது
மாணவிகளிடம் பாலியல் சீண்டல் போக்சோவில் ஆசிரியர் கைது சேலம், பிப்.8- சேலம் மாவட்டம், ஏற்காடு மையப்பகுதியில் அமைந் துள்ள ஏகலைவா பள்ளியில், இளையகண்ணு (37) என்பவர், அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் பல ஆண்டு களாக மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள் ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த பிப்.5 ஆம் தேதி யன்று சேலம் குழந்தைகள் நல அலுவலர்கள், இப்பள்ளி யில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். அப்போது, 10க்கும் மேற்பட்ட மாணவிகள் அறிவியல் ஆசிரியர் இளையகண் ணின் மீது பாலியல் சீண்டல் குறித்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து இளையகண்ணு மீது குழந்தைகள் நல அலு வலர்கள் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சேலம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா தலைமையில் காவலர்கள், பள்ளி யில் விசாரணை மேற்கொண்டு, இளையகண்ணு மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சனியன்று கைது செய்தனர்.
‘கூகுல் மேப்’பின் தவறான வழிகாட்டலால் விபத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு
சேலம், பிப்.8- ‘கூகுல் மேப்’பின் தவறான வழிகாட்டலால், சேலம் மாநக ருக்குள் நுழைந்த லாரியின் சக்கரம் சாக்கடை கால்வா யில் சிக்கியதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இருந்து பட்டாசு ஏற் றிக்கொண்டு, கேரள மாநிலம் கொச்சிக்கு கண்டேய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பப்பு யாதவ் (27) என்பவர், கூகுள் மேப் உதவியுடன் லாரியை ஓட்டி வந்தார். இந்நிலையில், சனியன்று அதிகாலை 5 மணிக்கு சேலம் அருகே வந்த போது, கூகுள் மேப் தவறுத லாக வழிப்பாதையை சேலம் மாநகருக்குள் காட்டியது. இத னால் சேலம் கடை வீதிக்கு வந்த கண்டேய்னர் லாரி, கோட்டை மாரியம்மன் கோவில் எதிரில் திரும்ப முயற்சித்த நிலையில், லாரியின் பின் சக்கரம் சாக்கடை கால்வாய்க்குள் சிக்கியதால், லாரி சாலையின் குறுக்கே நின்றது.இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. இதன்பின் சேலம் நகர காவல் துறையினர், போக்குவரத்து துறை போலீ சார், மாநகராட்சி ஊழியர்கள் என அனைவரும் இணைந்து, லாரியின் பின் டயரை சாக்கடை கால்வாயில் இருந்து வெளி யேற்றி பின்னர் லாரியை மீண்டும் கொச்சினுக்கு அனுப்பி வைத்தனர்.
மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு தருமபுரி, பிப்.8- தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த சிக்கலூர் கிராமத் தில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் தங்கி, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த உத்தம்கட்டா (22), பவித்தரசந்திரன் (25) ஆகியோர் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், இருவ ரும் வெள்ளியன்று இரவு அருகிலுள்ள அரசு மதுபானக் கடைக்கு சென்றுவிட்டு, அருகில் உள்ள காட்டுராஜா என்பவ ரின் விவசாய நிலத்தின் வழியாக வரும்போது, வயலுக்கு காட்டு விலங்குகள் அதிகமாக வருவதால் அதை தடுப்பதற் காக கள்ளத்தனமாக வைக்கப்பட்டிருந்த மின் ஓயரி லிருந்து மின்சாரம் தாக்கியதில், உத்தம்கட்டா சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். மேலும், பவித்திரசந்திரன் காயம டைந்து, கோழிப்பண்ணைக்கு சென்று உத்தம்கட்டாவின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அப்போது மகனை தேடிச்சென்ற அபிராகாம்கட்டா (45), அதே வயலில் மின்சா ரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த பவித்திரசந்திரன் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.