சேலம், அக்.13- சேலம் மாநகரப் பகுதியில் அதிகரித்து வரும் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாநகரம், நான்கு ரோடு மேம்பாலம் முதல் டிவிஎஸ் வரை அதிக எண்ணிக்கையில் வர்த்தக நிறுவனங்களும், துணிக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. பண்டிகை காலம் நெருங்குவதை தொடர்ந்து, இப்பகுதியில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாதாரணமாக ஐந்து நிமிடத்தில் கடக்க வேண்டிய இந்த சாலையை, இந்த காலகட்டத்தில் அரை மணி நேரம் முதல் முக்கால் மணி நேரம் வரை வாகன ஓட்டிகள் கடக்க நேரிடுகிறது. அவசர கால ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அத்தியா வசிய தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு கண்டு, போக்குவரத்து நெரிசலை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத் துள்ளனர்.