districts

ரூ 80 லட்சம் இயந்திரம் மாயமான வழக்கில் காவல்துறை நியாயமாக விசாரிக்க சிபிஎம் வலியுறுத்தல்

திருப்பூர், அக்.4 - திருப்பூர் மாவட்டம் சின்னம ருதூர் ஊராட்சியில் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள ஹிட்டாச்சி வண்டி மாயமான வழக்கில் காவல்துறை நியாயமாக விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத் திள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாராபுரம் வட்டக் குழு செயலாளர் என்.கனகராஜ், தமிழக முதல்வர் மற்றும் காவல் துறை தலைவர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியி ருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்ன மருதூர் ஊராட்சியில் தாய் மூகாம்பிகை ப்ளூ மெட்டல் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. அதில் வினோ கார்த்திக், முத்துச்சாமி, விக்னேஸ் வரன், மணிகண்டன் ஆகிய நான்கு பேர் பங்குதாரராக இருந்தனர். அந்த நிறுவனத்தில் தருமபுரி மாவட் டம் அரூர் வட்டத்தைச் சேர்ந்த திலீ பன் என்பவர் உட்பட பல பேர் வேலை செய்தனர். இந்த நிர்வா கத்தார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சுமார் ரூ.80 லட்சம் மதிப்பில் சேலம் ஆக்சிஸ் வங்கி மூலம் மெஷின் ஹிட்டாச்சி இயந் திரம் திலீபன் பெயரில் வாங்கி வேலைக்கு கொடுக்கப்பட்டது. சில காலம் வாடகையும் கொடுத்திருக் கிறார்கள். அதன் பிறகு குவாரி மூடப்பட்டது. அனைவரும் வேலை இழந்தனர். அதில் கூலி பாக்கி உள்ளது.  மேலும் ஹிட்டாச்சி வண்டி எங்கு உள்ளது என்று மூலனூர் காவல் நிலையத்தில் பணிபுரியக்கூ டிய காவலர் ரமேஷ் என்பவர் விசா ரிக்கிறார். அதற்கு உடந்தையாக காவல் நிலைய ஆய்வாளர் விஜயா இருக்கிறார். ரூ. 80 லட்சம் மதிப்பான புகாரை காவலர் விசாரிப்பது தவறு. இதில் மூலனூர் காவல் ஆய்வாளர், எதிரிகளிடமிருந்து சுமார் ரூ. 1.5 லட்சம் லஞ்சமாக பெற்று இருக்கி றார். அதற்கு ரமேஷ் ஏட்டு உடந்தை யாக இருந்திருக்கிறார்.  மேலும் மனுதாரரிடம் 45 ஆயி ரம் ரூபாய் லஞ்சமாக பெற்று இருக் கிறார். புகாரில் சி.எஸ்.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சி.எஸ்.ஆர் நம்பர் 87/2024.  சுமார் நூறு நாட் கள் ஆன பிறகும் பிரச்சனை தீர வில்லை. இதுகுறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் நேரில் சென்று புகார் செய்ததன் விளைவாக அவரே எதிர் மனுதாரர், மனுதாரர் ஆகியோரை நேரில் விசா ரணை செய்தார்.  அதில் பல உண்மைகள் வெளி வந்தது. வண்டி எங்கே இருக்கிறது என்ற கேள்விக்கு எதிர் மனுதாரர் பதில் சொல்லவில்லை. வண்டி யில் உள்ள ஜிபிஎஸ் கருவி செயல் இழக்க செய்துவிட்டார்கள். வண் டிக்கு இன்சூரன்ஸ் முடிந்துவிட் டது. கேட்டால் வண்டியை வேறு ஒருவருக்கு விற்று விட்டார்கள் என்று சொல்கிறார்கள். திலீபன் பெயரில் உள்ள வண் டியை விற்பதற்கு இவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. இது ஒரு மோசடியாகும். எனவே வண்டியை ஒப்படைக்க வேண்டும் என்று பல தடவை கேட்டாலும், பதில் இல்லை. எனவே காவல் துறை துணை கண்காணிப்பாளர் விசாரணை செய்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்யச்சொல்லி மூலனூர் காவல் நிலையத்துக்கு சொல்லிவிட்டார். ஆனால் இன்று வரை வழக்கு பதிவு செய்யாமல் மூலனூர் காவல் ஆய்வாளர் காலம் கடத்திக் கொண்டு வருகிறார். மேலும் இந்த வழக்கில் 379 என்ற சட்டப் பிரி வில் வழக்கு பதிவதற்கு பதிலாக, 420 சட்ட பிரிவில் பதியலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். எனவே இந்த வழக்கில் காவல் துறை கண்காணிப்பாளர் சொன்ன அறிவுரையை கூட காவல் ஆய்வா ளர் ஏற்க மறுக்கிறார். எனவே இது குறித்து காவல் துறை உரிய முறையில் விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். காவல்துறை யில் இருக்கக்கூடிய ஆய்வாளர் விஜயா, ஏட்டு ரமேஷ் போன்றவர் கள் காவல் துறைக்கே களங்கம் விளைவிக்க கூடிய நடவடிக்கை யில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து உரிய முறையில் விசா ரணை மேற்கொண்டு துறை ரீதி யான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  கேட்டுக் கொள்வதா கவும், இந்த பிரச்சனையில் உடனடி யாக வழக்கு பதிவு செய்ய வேண் டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.