வீடு ஒதுக்கீடுதாரர்களுக்கு பத்திரம் வழங்கும் முகாம்
தருமபுரி, ஏப்.3- தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் ஒசூர் வீட்டு வசதி பிரிவு சார்பில், வீடு பெற்று முழு தொகை செலுத்திய வர்களுக்கு பத்திரம் வழங்கும் முகாம் நடைபெற உள்ள தாக மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்ய தர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் ஒசூர் வீட்டு வசதி பிரிவு சார்பில் தருமபுரி மாவட்டத்தில் வீடு, மனை ஒதுக்கீடு பெற்று முழுத்தொகை செலுத்தி, விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்களுக்கு ஏப்.4 முதல் ஏப்.8 வரை 5 நாட்களுக்கு விற்பனை பத்திரம் வழங்கும் முகாம் ஒசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு, முழுத் தொகை செலுத்திய ஒதுக்கீடுதாரர்கள் விற்பனை பத்திரம் வழங்கும் இச்சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விதி முறைகளை பின்பற்றி ஒதுக்கீடுதாரர்கள் விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி
இளம்பிள்ளை, ஏப்.3- சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி அருகே இருப்பாளி மேல் அக்கரைப்பட்டி பகுதியில் மாதேஸ்வரன் (60), என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அமைந்துள்ள வீட்டின் மேற் கூரை தகரத்தால் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை யில், மாதேஸ்வரனின் கூரை வீட்டிற்கு எலக்ட்ரிக் கல் வேலை செய்வதற்கு, அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கார்த்திக் (26) மற்றும் ஆடையூர் தாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் நவீன்ராஜா (24), ஆகியோர் சனியன்று காலையில் வந்தனர். அங்கு அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக இருவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த பூலாம்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்
உதகை, ஏப்.3- நீலகிரி மாவட்டம், உதகை அருகே எம்.பாலாடாவில், உண்டு, உறைவிட பழங்குடியினர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமையாசிரியராக சுப்பிரமணி (58) பணியாற்றி வந்தார். இப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் பழங்குடியின மாணவி அணிந்து வந்த துப்பட்டாவை இழுத்து அத்து மீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோருடன் சென்று உதகை ரூரல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வன்கொ டுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சுப்பிரமணி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அலுவலர் சுகந்தி பரிமளம் கூறுகையில், சென்னை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் உத்தரவுப்படி, பள்ளி மாணவிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய தலைமையாசிரியர் சுப்ரமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றார்.
உடுமலை குட்டைத்திடல் ஏலம் இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு
உடுமலை, ஏப்.3- திருப்பூர் மாவட்டம், உடுமலையில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, குட்டைத்திடலில் பொருட்காட்சி அமைப்பதற்கான பொதுஏலம் இரண்டா வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உடுமலை மாரியம்மன் திருக்கோவிலின் 2022ஆம் வருட தேர்திருவிழா வரும் ஏப். 5 ஆம் தேதி துவங்கி 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள 0.91 ஏக்கர் பரப்பளவில் உள்ள குட்டைத்திடலில் தனியார் பொருட்காட்சிகள் நடத்த உரிமம் வழங்குவதற்காக உடுமலை தாலுகா அலுவலகத்தில் வட் டாச்சியர் கணேசன் தலைமையில் பொது ஏலம் நடை பெற்றது. ஏலத்தொகையாக ரூ.58 லட்சம் நிர்ணய தொகை யாக அரசு அறிவித்திருந்தது. அதில் 4ல் ஒரு பங்கு தொகையாக ரூ.14 லட்சத்து ஐம்பதாயிரம் வைப்புத் தொகையாக,வரைவோலை எடுத்து ஏலத்தில் கலந்து கொள்ள அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, கடந்த 31 ஆம் தேதி நடைபெற்ற ஏலத் தில், ஏலத்தொகை அதிகமாக உள்ளதாக கூறி யாரும் ஏலம் கோரவில்லை. இதையடுத்து, ஏலம் சனியன்று நடைபெற்றது. இதன்பின், மீண்டும் ஏலத்தொகை அதிக மாக இருப்பதாக கூறி யாரும் ஏலம் கோரவில்லை. இதனால், ஏலத்தை மீண்டும் ஒத்திவைத்ததுடன் ஏலத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் என வட்டாச்சியர் அறிவிப்பு செய்தார். குட்டைத்திடல் ஏலம் இரண்டாவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.3.86 கோடிக்கு பருத்தி ஏலம்
தாராபுரம், ஏப்.3- மூலனூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3.86 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைகூட முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த 1028 விவசாயிகள் பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அதேபோல், பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.13 ஆயிரத்து 399க் கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 11ஆயிரத்து 250க்கும், சராசரி விலையாக ரூ.12ஆயிரத்து 550 க்கும் விலை போனது. மொத்தம் 9521 முட்டைகள் 3 ஆயிரத்து 104 குவிண் டால் ரூ. 3 கோடியே 86 லட்சத்து 4 ஆயிரத்து 666க்கு விற்பனையானது. இந்த ஏலத்தில் 23 வணிகர்கள் பங்கேற்ற னர். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.