கடலூர், நவ.11- இந்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத் துறையும், மத்திய அறிவியல் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றக் குழுவும் இணைந்து ஆண்டுதோறும் பள்ளி மாண வர்களுக்கான தேசிய குழந்தைகள் அறிவி யல் மாநாட்டை நடத்தி வருகின்றன. இந்த மாநாட்டை கடந்த 27 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தி வருகிறது. நிகழாண்டு, ‘தூய்மையான, பசுமையான மற்றும் ஆரோக்கியமான தேசத்துக்கான அறி வியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்’ என்ற கருப்பொருளில் நாடு முழுவதும் மாண வர்கள் 3 மாதங்களாக ஆய்வு மேற்கொண்ட னர். கடலூர் மாவட்ட தேசிய குழந்தைகள் அறி வியல் மாநாடு நெய்வேலி அருகே கீழக் கொல்லை நேஷனல் கல்வியல் கல்லூரியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முதன்மைப் பொது மேலாளரும், தமிழ்நாடு அறிவியல் இயக்க புரவலருமான எஸ்.மதிவாணன் தலைமை வகித்தார். இயக்கத்தின் மாவட்டத் தலைவர் வி.என்.சுப்பிரமணியன் வரவேற்றார். துணைத் தலைவர் எஸ்.பாலகுருநாதன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
மாநிலச் செயலாளர் எஸ்.ஸ்டீபன்நாதன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். நேஷ னல் கல்வியல் கல்லூரித் தாளாளார் ஆர். அர்ஜூன், மாவட்ட துணைச் செயலாளர் கே. விஜயகுமார், கே.பிரசன்னகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழக வேளாண்மைத் துறை திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.கண்ணன் உரையாற்றினார். இம்மாநாட்டில், 44 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சார்பில் 122 ஆய்வு அறிக்கை கள் சமர்ப்பிக்கப்பட்டன. கழிவிலிருந்து செல்வம், மரபு சார்ந்த அறிவியல் தொழில் நுட்பம், துப்புரவு சுகாதார மேலாண்மை ஆகிய தலைப்புகளில் மாணவர்கள் ஆய்வு களை மேற்கொண்டனர். மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ‘குழந்தை விஞ்ஞானி’ சான்றிதழ் வழங்கப் பட்டது. மாவட்ட என்சிஎஸ்சி ஒருங்கிணைப்பா ளர் எம்.உதயேந்திரன் தலைமையில், கல்லூரி முதல்வர் ஆஷா, கிருஷ்ணவேணி உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் அறிக் கைகளை ஆய்வு செய்தனர். இளநிலை பிரிவில் நெய்வேலி ஜவஹர் சிபிஎஸ்இ பள்ளி, மாடர்ன் ஜவஹர் மெட்ரிக் பள்ளி, சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் பள்ளி, கும்முடிமூளை ஊராட்சி ஒன்றியப் பள்ளி களும் முதுநிலைப் பிரிவில் கடலூர் கிருஷ்ண சாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி ஜான்டூயி பள்ளி, நெய்வேலி ஜவஹர் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களின் சிறந்த 7 ஆய்வுகள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வுக் குழுவுக்கு அறிவியல் இயக் கத்தின் மாநில துணைத் தலைவரும், தஞ்சை பல்கலைக்கழக முனைவருமான வி.சுகு மாரன் பரிசுகளை வழங்கினார். தேர்வான மாணவர்கள் வருகிற 16-ஆம் தேதி வேலூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மாநாட்டு ஏற்பாடுகளை இயக்க நிர்வாகிகள் எம்.ராணி, தெரசா கேத்த ரின், சசிகலா, தாமரைச்செல்வி, பரமேஸ்வரி, அறிவழகன், இளங்கோ, ஜோதிநாதன், பூர்வ சந்திரன் உள்ளிட்டோர் செய்தனர். மாவட்டச் செயலாளர் ஆர். தாமோதரன் நன்றி கூறினார்.