திருப்பூர், செப்.10- திருமுருகன் பூண்டி நகராட்சி யில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தூய்மை பணியாளர்க ளுக்கு, மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியம் வழங்கக்கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. திருமுருகன் பூண்டி நகராட்சி யில் ஒப்பந்த அடிப்படையில் 70 பெண்கள் உட்பட சுமார் 150 தொழி லாளர்கள் தூய்மை பணி செய்து வருகின்றனர். இவர்களுக்கு வழங்க வேண்டிய மாத ஊதியம் முறையாக வழங்கப்படாததுடன், தமிழக அர சின் அரசாணைப்படி, மாவட்ட ஆட்சி யர் உயர்த்தி அறிவித்துள்ள ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத் தின் மூலம் சமீபத்தில் ஊதியத்தை முறையாக வழங்கவும், மாவட்ட ஆட் சியர் அறிவித்த ஊதியம் வழங்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.
இந்த கோரிக்கை இன்னும் நிறை வேற்றப்படாத நிலையில் சனிக்கி ழமை காலை சுமார் 150 தூய்மைப் பணியாளர்களும் நகராட்சி அலுவ லகத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத் துக்கு திருமுருகன் பூண்டி நகர்மன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உடன் அமர்ந்தனர். சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், மார்க்சிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பி னர் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கட்சி யின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த தொழிலாளர் கோரிக்கை குறித்து நக ராட்சி ஆணையரிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில், சிஐடியு ஏற் கெனவே நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியாக தொழிலாளர்க ளுக்கு ஊதியம் வழங்க ஏற்பாடு செய் திருப்பதாகவும், வரும் 12ஆம் தேதி ஊதியம் வழங்கப்படும் என்றும் ஆணையர் தெரிவித்தார். அத்துடன் மாவட்ட ஆட்சியர் அறி வித்த ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என்றும் சிஐடியு வலியுறுத்தியது. மாத ஊதியம் வழங்க நகராட்சி ஆணையர் உறுதியளித்த நிலை யில் தூய்மைப் பணியாளர்கள் முற் றுகைப் போராட்டத்தை முடித்துக் கொண்டு வேலைக்குச் சென்றனர். ஆட்சியர் அறிவித்த ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக வலிமையான போராட்டம் நடத்தப்படும் என்று சிஐ டியு மாவட்ட செயலாளர் கே.ரங்க ராஜ் கூறினார்.