கோவை, நவ.6- குறைந்தபட்ச ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் கள் புதனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த ஊழியர்க ளுக்கு குறைந்த பட்ச ஊதி யத்தை அமல்படுத்த வேண் டும். ஈபிஎப் மற்றும் ஈஎஸ்ஐ உள்ளிட்ட சமூக நல பாதுகாப்புகளை அமல் படுத்திட வேண்டும். நிலுவையிலுள்ள ஊதி யத்தை உடனடியாக வழங்கிடவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை, பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பு தலை வர் குடியரசு தலைமை வகித்தார். ராஜசேக ரன் துவக்கவுரையாற்றினார். ஒருங்கி ணைப்புக்குழுச் செயலாளர் மகேஸ்வரன் மற் றும் ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் முத்தலிப் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கி பேசினார்கள். முடிவில், ஈஸ்வரன் நன்றி கூறினார்.