districts

img

‘அழுகிய ஆப்பிளுக்குள்ளும் விதைகள் உள்ளன’

கிரேக்கத்தில் சோலோன் என்கிற பேரறிஞன் இருந்தான். அவன் திடீ ரென சந்தை நடைபெறுகிற இடத்திற்கு  ஒரு அழுகிய ஆப்பிலோடு வந்து,  என் கையில் ஒரு அழுகிய ஆப்பிள் உள் ளது. இந்த ஆப்பிளை பயன்படுத்தி நூறு நல்ல ஆப்பிள்களை உருவாக்க  முடியுமா என்று சந்தையில் கூடியிருந்த  மக்களிடம் கேட்டான். அந்த கேள்விக் கான விடை யாருக்கும் தெரிய வில்லை. ஈரோடு அரசினர் பொறியியல் கல் லூரியில் கலைக்குயில் தமிழ்ப் பேரவை நடத்திய ஆசிரியர் தின விழா  கருத்தரங்க நிகழ்வில் இப்படி ஆரம் பித்தார் பாலசாகித்ய புரஸ்கார் விருது  பெற்ற எழுத்தாளர் ஆயிஷா நடரா ஜன். மாணவர்கள் சுவாரஸ்யத்தோடு காதுகள் இரண்டையும் ஆயிசா நட ராஜனிடம் அடகுவைத்திட தொடர்ந்து  பேசிய ஆயிசா நடராஜன், அந்த  கேள்விக்கான விடை யாருக்கும் தெரி யவில்லை. இந்த ஆப்பிளைக் கொண்டு போய் நல்ல ஆப்பிள் களோடு வைத்து விடாதே, அவையும்  கெட்டுப் போய்விடும் என்று அனைவ ரும் சொன்னார்கள். ஆனால், ஒரு சிறு வன் எழுந்து நின்று கையை உயர்த்தி னான். எனக்கு விடை தெரியும் என்று சொன்னான். என்ன சொல்கிறாய் என்று அந்த 8 வயது சிறுவனைக் கேட் டார் சோலோன். இந்த அழுகிய ஆப்பி ளுக்குள்ளும் விதைகள் உள்ளன. இந்த விதைகளை நடுங்கள். இவை  ஒருநாள் மரமாகும். 100 அல்ல ஒரு லட் சம் ஆப்பிள் பழங்கள் உங்களுக்குக் கிடைக்கும் என்றான் அந்த சிறுவன். அப்போது சோலோன் சொன்னார் எவ் வளவு அற்புதம், இந்த விதைகளுக்கு ஒப்பானவைதான் புத்தகங்கள் என் றார். அந்த சிறுவனின் பெயர் சாக்ரடீஸ்.  கிரேக்க அறிவு மரபில், சோலோனின் மாணவனான சாக்ரடீசிற்கு ஒரு மாண வன் இருந்தான். அவன் பெயர் பிளாட்டோ. அந்த பிளாட்டோ தான்  உலகத்தின் முதல் கல்வி அமைப்பை உருவாக்கினான். சாக்ரடீசிற்கு விஷம்  கொடுத்து கொன்றவர்களால் பிளாட் டோவை ஒன்றும் செய்ய முடிய வில்லை. ஏனென்றால் அதிகாரம் எப் போதுமே அறிவுக்கு எதிராக செயல் படுகிற ஒரு காலம் இருந்தது. பிளாட் டோவின் மாணவனாக இருந்தவன் அரிஸ்டாட்டில். 

உலகை மாற்றிய புத்தகம்

ன்கிற ஒரு புத்தகம் இந்த உலகத்தை  மாற்றிய புத்தகம். இந்த புத்தகத்தைப் போல ஒவ்வொரு புத்தகத்தையும் அறி முகம் செய்யும் போது நாம் மூன்று விச யங்களைச் செய்வோம். ஒன்று அந்த புத்தகத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தவர் யார்? ஏனென்றால் நம் இந் தியாவில் புத்தக வெறியர்கள் அதிகம் பேர் வாழ்ந்திருக்கிறார்கள். அரிஸ்டாட் டில் எழுதிய எத்திக்ஸ் என்கிற புத்த கம் கி.மு.349 இல் எழுதப்பட்டது. தன்னு டைய மகள் பிரியதர்சினிக்கு அல்மேரா  சிறையில் 9 வருடங்கள் சிறையில்  அடைக்கப்பட்டிருந்த போது புத்த கங்களின் காதலர் ஜவஹர்லால் நேரு,  தன் மகளுக்குக் கடிதங்கள் எழுதி னார். அவருடைய மகளை கல்லூரி யிலே சேர்க்க முடியவில்லை. அந்த நிலையில் தன் கடிதங்களால் அந்த குழந்தைக்குப் பாடம் புகட்டினார். அன் புள்ள பிரியதர்சினிக்கு, என்று தொடங் கும் அந்த கடிதங்கள் எல்லாம் தொகுக் கப்பட்டிருக்கின்றன. அதில், ஒரு கடி தத்தில்தான் இந்தியாவில் முதல் முறை யாக 1935 இல் எத்திக்ஸ் புத்தகம் அறிமு கம் செய்யப்படுகிறது.  அவர் சொன்னார் அன்பு மகளே,  சாலையில் நின்று கொண்டு எவ்வளவு  தூரம் உன்னால் பார்க்க முடியும். ஒரு  மேடையின் நின்று பார்த்தால் கொஞ் சம் தெரியும். கடையின் மாடியின் மீது நின்று பார்த்தால் இன்னும் கொஞ்சம் தெரியும். ஆனால், நீ மலை மீது நின்று பார்த்திருக்கிறாயா? மலைமீது நின்று பார்க்கின்றபோது எவ்வளவு தெரியுமோ அவ்வளவெல்லாம் அடங் கியிருக்கிற புத்தகம் தான் எத்திக்ஸ் புத் தகம் என்று எழுதியிருக்கிறார் நேரு.  இந்த புத்தகம் தற்போது முழுமை யாகக்கிடைக்கவில்லை. காரணம் அலெக்சாண்டிரியாவின் நூலகம் எரிக் கப்பட்டது. ஆனால், நம்மிடம் இரண்டு  எத்திக்ஸ்கள் இப்போது உள்ளன. ஒன்று நிக்கோ மேக்சியன் எத்திக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. மற் றொன்று யூடோ மேக்சியன் எத்திக்ஸ்  என்று அழைக்கப்படுகிறது. இந்த  புத்தகங்களை அறிமுகம் செய்யும் போது, அதனை வாசித்து விட்ட அனுப வத்தையும் தர வேண்டும்.  நிக்கோ மேக்சியனும், யூடோ மேக்சியனும் அரிஸ்டாட்டிலின் மாண வர்கள். தனது கடைசி 20 ஆண்டுகள் எங்கிருந்தார் என்று தெரியாமல் மறை முக வாழ்க்கை வாழ்ந்து இறந்து போன வர் அரிஸ்டாட்டில். ஏனென்றால் அலெக்சாண்டிரியா வீழ்ந்தது. அலெக் சாண்டர் தோல்வியுற்றான். அதன் பிறகு எங்கிருக்கிறான் அரிஸ்டாட்டில் என்று துரத்தி துரத்தி தேடினர். அப்படி  மறைந்து வாழ்கிற போது, தன்னுடைய  புத்தகம் அழிக்கப்பட்டு விடும் என்று அவருக்குத் தெரியும். நிக்கோ மேக்சி யன் எத்திக்ஸ் 10 வால்யூம் உள்ளது. யூடோ மேக்சியன் எத்திக்ஸ் எட்டு வால் யூம் உள்ளது. அது ஏன் உலகை மாற் றிய புத்தகம். நிக்கோ மேக்சியன், யூடோ  மேக்சியனும் அரிஸ்டாட்டில் சொன் னதை எல்லாம் குறிப்பு எடுத்தனர்.  இவர்கள் இருவரும் அதனை தனித் தனியே வெளியிட்டிருக்கிறார்கள். அதை வைத்துத்தான் எத்திக்சை திரும்ப வரவைத்திருக்கிறோம். இந்த  புத்தகங்களில் அரிஸ்டாட்டில் இந்த உலகம் எப்படிப்பட்டது என்பதை விவரிக்கிறான். 

பிஎச்டி ஆய்வு முறை

இப்போது நாம் பிஎச்டி, ஆய்வு செய்ய வேண்டுமானால் ஒரு முறை  வைத்திருக்கிறோம். அந்த முறையி யலை அந்த புத்தகத்தில் அறிமுகம் செய்திருக்கிறான். இந்த உலகில் அறி வியலை ஆய்வுப் பூர்வமாக எடுத்துச்  செல்லுதல், அதன் பிறகு உனக்கென்று  ஒரு கேள்வியை உருவாக்கிக் கொள்.  அதற்கு தீர்வு என்று ஏதாவதொன்றை நினைத்துக் கொள். அதன் அடிப்படை யில் தரவுகளை சேகரிக்க வேண்டும். தரவுகளை எல்லாம் ஆய்வு செய்து தீர்வு சரியா என்று முடிவுகளை எழுத வேண்டும். இவற்றையெல்லாம் முத லில் உலகிற்கு அறிமுகம் செய்ததால்,  உலகின் போக்கை மாற்றிய புத்தகம்  என்று எத்திக்ஸ் புத்தகத்தை சொல்கி றோம். இந்த புத்தகத்தின் ஒரிஜினல் வாடிகான் என்றழைக்கப்படுகின்ற சிறிய நாட்டில் கிரைஸ் சர்ச் நூலகத் தில் வைக்கப்பட்டிருக்கிறது.  இப்புத்தகத்தை அறிமுகம் செய்த  ஜவஹர்லால் நேரு ஒரு மாமேதை. இதனை அறிமுகம் செய்த கடிதங் களை தொகுக்கின்ற போது இரண்டு புத்தகங்கள் கிடைக்கின்றன. ஒன்று  டிரீம்ஸஸ் ஆப் வேர்ல்டு ஹிஸ்டரி. மற் றொன்று டிஸ்கவரி ஆப் இந்தியா. இந்த  இரண்டையும் வாசிக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து 10 புத்தகங் களை அறிமுகம் செய்து பேசினார். பேச்சின் இறுதியில் தன் உரையி லிருந்து 10 கேள்விகளைக் கேட்டு மாணவர்களுக்கு புத்தகங்கள் பரிச ளித்து மாணவர்களை ஊக்கப்படுத்தி னர்.  இதனைத்தொடர்ந்து உடலே உன்னை ஆராதிக்கிறேன் என்ற தலைப் பில் கோவை கேஜி மருத்துவமனை யின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் ஜி.பக்த வச்சலம் உரையாற்றினார்.  ஈரோடு அரசினர் பொறியியல் கல் லூரியில் கலைக்குயில் தமிழ்ப் பேரவை நடத்திய இவ்விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் ஆ.சாரதா தலைமை வகித்தார். மன்னை.நா. பாண்டியன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் வெற்றிவேல் வரவேற் றார். நிகழ்வில் பெரும் திரளான மாண வர்கள், பேராசிரியர்கள், விரிவுரையா ளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். தொகுப்பு - சக்திவேல்