districts

உதகை மற்றும் நாமக்கல் முக்கிய செய்திகள்

உதகை தாவரவியல் பூங்காவில் கலை நிகழ்ச்சி

உதகை, ஏப். 30-மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளமாகும். பூங்காக்கள், படகு இல்லங்கள், தொட்டபெட்டா சிகரம், காட்சி முனைகள், நீர் வீழ்ச்சிகள் மற்றும் முதுமலை புலிகள் காப்பகம் போன்ற எண்ணற்ற சுற்றுலா தளங்கள் இங்குள்ளன. இதனை கண்டு களிக்க தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இந்தாண்டு கோடை விழாவினை தொடங்கும் வகையில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக மே முதல் நாளில் முற்பகல் 11 மணியளவில் தாவரவியல் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி இன்முகத்தோடு வரவேற்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


தோட்டக்கலை பயிற்சி

நாமக்கல், ஏப். 30-தோட்டக்கலையின் முக்கியத்துவத்தை நகர்புற மக்களுக்கு உணர்த்தும் வகையில் பயிர் சாகுபடி முறைகளில் உள்ள சமீபத்திய தொழில் நுட்பங்களை நேரடியாக அறிந்து கொள்ள தோட்டக்கலைத்துறை செம்மேட்டில் சிறப்பு பயிற்சி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.கொல்லிமலையில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் (செம்மேடு மற்றும் படசோலை) பண்ணை சுற்றுலா மற்றும் தோட்டக்கலை பயிர்கள் வளர்ப்பது, வீட்டுக் காய்கறி தோட்டம் அமைத்தல், காளான் வளர்ப்பு, மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் சாக்லெட் தயாரித்தல் போன்றவற்றிற்கான பயிற்சி நடைபெறும். இக்கோடை பயிற்சி முகாம் மே 2,3,5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. பயிற்சி கட்டணமாக நாளொன்றுக்கு ரூ.100 வீதம் மூன்று நாட்களுக்கு ரூ.300 செலுத்த வேண்டும். பயிற்சியின் முடிவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்மற்றும் நடவுச் செடி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு கொல்லிமலை தோட்டக்கலை உதவி இயக்குநர்- (9443898919) மற்றும் அரசு தோட்டக்கலை படசோலை பண்ணை மேலாளர்கள் (8660959576) மற்றும் செம்மேடு (9443025428) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் தோட்டக்கலை துணை இயக்குநர் விடுத்தசெய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.