ஈரோடு, மார்ச் 23- மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் சாலை அமைக்கும் பணி முடிவது எப்போது? என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்டது காகம் மற்றும் விளக்கேத்தி ஊராட்சி. விளக் கேத்தியிலிருந்து பெரிய வாய்க்கால் மேகரையான் தோட்டம் வரை சுமார் ஒன்றரை கி.மீ தூரம் சாலை அமைக்கும் பணி கடந்த சில வருடத்திற்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இப்பணி கடந்த ஒரு வருடமாக கிடப்பில் போடப் பட்டுள்ளது. அதேபோல் விளக்கேத்தி சிவகிரி சாலை யிலிருந்து காகம் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி செயல ரைத் தொடர்பு கொண்ட போது, பயிற்சி வகுப்பில் இருப் பதால் உரிய விபரங்கள் அளிக்க முடியவில்லை. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளவும் எனத் தெரி வித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, பொறியாளரை தொடர்பு கொள்ளுங்கள், என்றார். இதுகுறித்து உதவி பொறியாளர், ஒரு வருடமாக பணிகள் முடிவுறாமல் தொய்வடைந்துள்ளது என்பதை மறுத் தார். 3 கி.மீ தூர பணி அது. இடையில் ஒரு பகுதி ஆக்கிர மிப்பு எனத் தெரிவிக்கப்பட்டது. பொதுப்பணித்துறையில் தெரிவித்து அரசு நிலம் என உறுதி செய்யப்பட்டுவிட்டது. ரூ.37 லட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சாலை அமைக்கும்பணி மேற்கொள்ளப் பட்டது. 150 மீட்டர் மட்டும் நின்று விட்டது. அது விரைவில் முடிக்கப்படும். இப்பணியினை குறிப்பிட்ட நாளில் முடிக்க வேண்டும் எனக் காலக் கெடு இல்லை. ஜல்லி போட்டு மண் கொட்டி சாலை உருவாக்கப்படும். அதன் பின்னர் வேறு திட்டத் தில் தார்ச்சாலையாக, மாற்றப்படும் எனத் தெரிவித்தார்.