சென்னை,மே 9-பொறியியல் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த அரசுக்கு பரிந்துரைப்பது என்று அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்துக்கு பின்னர் பதிவாளர் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு பி.இ. முடித்து ஓரிரு பாடங்கள் அரியர் வைத்ததன் காரணமாக பட்டம் பெறாமல் இருக்கும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், மீண்டும் தேர்வு எழுத கடைசி வாய்ப்பு வழங்கப் படவுள்ளது. இதனால் 30 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைக்கு ஏற்ப இந்த ஆண்டு பி.இ. மற்றும் எம்.இ. பாடத்திட்டங்களில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு பொறியியல் படிப்புகளுக் கான கல்வி கட்டண உயர்வு அரசின்ஒப்புதல் கிடைத்தால் நடைமுறைப் படுத்தப்படும் என்று தெரிவித்தார்.