நாமக்கல், செப். 12- குறைந்தபட்சம் டிஏ உடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னி ருத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாநி லம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது. பள்ளிபாளையம் தமிழ்நாடு அங் கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் கள் சங்க அலுவலகம் முன்பு வியா ழன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் ஒன்றிய செயலாளர் அம் பிகா தலைமை தாங்கினார். இதில் அங் கன்வாடி ஊழியர்களுக்கு, குறைந்த பட்சம் டி.ஏ உடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், பத்து ஆண்டு பணி முடித்த அங்கன்வாடி ஊழி யர்கள் அனைவருக்கும் மேற்பார்வை யாளராக பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும், 10 ஆண்டு பணி முடித்தவு டன் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், மகப்பேறு விடுப்பு அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்குவது போல அங்கன்வாடி ஊழியர்களுக் கும் ஒரு வருடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத் தில் முன்வைக்கப்பட்டது.