districts

img

அனைத்து கிராமப்புற பெண்களுக்கும் உரிமைத்தொகை

கோவை, ஜூலை 16– மகளிர் உரிமைத்தொகையை அனைத்து கிராமப்புற பெண்களுக்கு வழங்குமாறு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ் மாநில நிர்வாகிகள் கூட்டம் கோவையில் ஞாயிறன்று நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவ ரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்ன துரை தலைமை வகித்தார்.  கோவை மாவட்ட செயலாளர் ஏ.துரைசாமி வரவேற்றார். இக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமைத் தொகையை கிராமப்புறங் களில் வாழும் ஏழை, எளிய  பெண்கள் அனை வருக்கும் வழங்க வேண்டும். ஒன்றிய அரசு உயர்த்தியுள்ள மின்சார கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். 37 பேரூராட்சிகள் உட்பட ஏழு நகராட்சிகள் அனைத்திலும் கிராமப்புற தன்மை கொண்ட வீடில்லாத தொழிலாளர் களுக்கு, கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, வீட்டுமனை வழங்க சிறப்பு திட்டம் அமல் படுத்த வேண்டும். 30 ஆண்டுகளுக்கு மேலாக நீர்நிலை புறம்போக்குகளான ஓடை மற்றும் ஏரிகளில் ஆகியவற்றில் வசிப்பவர்களுக்கு அரசு வீட்டு மனை பட்டா வழங்குவதற்கு ஓர் சிறப்பு அரசாணை வெளியிட்டு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஏழை, எளிய  மக்களுக்கு குடிமனைகளை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. முடிவில், மாவட்ட தலை வர் தி.ரவீந்திரன் நன்றி கூறினார். முன்னதாக, இக்கூட்டத்தில் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவரும், முன் னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.லாசர், மாநில பொதுச்செயலாளர் வி.அமிர்தலிங் கம், மாநிலப் பொருளாளர் ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட செய லாளர்கள் கலந்து கொண்டனர்.