மேட்டுப்பாளையம், மே 29- உயர் அழுத்த மின்சார கம்பிக ளுக்கு அடியில் கட்டப்பட்ட புதிய குடிநீர் மேல்நிலை தொட்டியை இடிக்க மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் தாலுகா, காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் டது தேக்கம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பத்திற்கும் மேற்பட்ட கிராமங் களில் புதிதாக குடிநீர் மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இதில் தேக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள சாலையூர் என்னுமிடத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி ரூ. 9.20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள் ளது. இந்த மேல்நிலை தண்ணீர் தொட்டியின் மேல் பகுதியில் உயர் அழுத்த மின்சார கம்பிகள் செல்வ தால் இங்கு தண்ணீர் தொட்டி கட்டக் கூடாது என மின்வாரியத் தின் எதிர்ப்பை மீறி அவர்களது அனுமதியை பெறாமலே இந்த மேல்நிலை தொட்டி கட்டப்பட்ட தாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை காரணமாக இத் தொட்டிக்கு பல மாதங்களாக குழாய் இணைப்பு கொடுக்கப்ப டவில்லை. இவ்விடத்தில் மேல் நிலை தொட்டி கட்ட ஊராட்சி மன்றக் கூட்டத்தில் இதன் தலை வர் மற்றும் உறுப்பினர்களின் ஆத ரவோடு தீர்மானம் நிறைவேற் றப்பட்ட பின்னர், காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்து அனு மதி வழங்கிய பின்னரே இம்மேல் நிலை தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால், மின்வாரிய விதிக ளுக்கு முற்றிலும் முரணாக இத் தொட்டி கட்டப்பட்டதால் இதனை இடிக்க மின்சார வாரியம் ஊராட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. இதனால் ரூபாய் 9 லட்சத்து 20 ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்பட்ட இத்தொட்டி மக்கள் பயன்பாட்டிற்கு வராமலே இடிக்கப்பட உள்ளது. ஊராட்சி நிர் வாகம் மற்றும் காரமடை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் அலட்சிய போக்கால் அரசு பணம் வீணா வது சர்ச்சையை உருவாக்கியுள் ளது. இது குறித்து காரமடை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்ட போது, “மின்வாரியம் குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் கவ னத்திற்கு கொண்டு சென்றுள் ளோம், அடுத்ததாக வரும் உத்தி ரவின்படி நடவடிக்கை எடுக்கப்ப டும்” என்றார். மக்கள் பணம் வீணாவதை தடுக்க தவறு செய்த அதிகாரிகளி டம் இருந்து இதற்கான இழப்பீட்டு தொகையை வசூல் செய்ய வேண் டும் என்பது இப்பகுதி சமூக ஆர்வ லர்களின் கருத்தாக உள்ளது.