districts

நில அளவைப் பிரிவில் லஞ்சம் ஊழலுக்கு எதிராக முற்றுகை போராட்டம் நடத்த விவசாய சங்கத்தினர் முடிவு

உடுமலை, செப்.8- நில அளவைப் பிரிவில் லஞ்சம் பெற்று,  நிலம் அளக்க செல்லும் அதிகாரிகள் மீது  வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் உடு மலை வருவாய் கோட்டட்சியர் அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா வட்டாட்சியர் அலுவ லகத்தில் செயல்படும் நில அளவை பிரிவில்  இருக்கும் பணியாளர்கள் விதிமுறைகளுக்கு  உட்பட்டு நிலங்களை ஆளவீடு செய்யாமல்,  பணம் தரும் நபர்களுக்கு மட்டுமே நிலத்தை  அளக்க செல்கிறார்கள். மேலும் இவர்க ளுக்கு பணத்தை பெற்று தர இப்பகுதியில்  உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவல கத்தின் அலுவலர்களும் இடைத்தரகர் போல  செயல்படுகின்றனர். நிலத்தை அளக்க பணம்  தராத நபர்களின் நிலத்தின் வரைபடைத்தை  திட்டமிட்டு கணினியில் தவறாக பதிவேற் றம் செய்கின்றனர். இது கண்டிக்கதக்கது என் றும், அவ்வாறு தவறாக கணினியில் பதி வேற்றம் செய்த நிலத்தை சரி செய்ய தனியாக  ஒரு தொகை வசூல் செய்வதாக தொடத்து புகார் தெரிவித்தும், வட்டாட்சியர் எவ்வித  நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகி றது. இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கதி னர் கூறுகையில், நில அளவை பிரிவில் நடை பெறும் முறைகேடுகள் குறித்து விவசாயிகள்  குறைதீர் கூட்டத்தில் பல முறை புகார் தெரி வித்தும் எவ்வித நடவடிக்கையும் வட்டாட்சி யர் எடுக்க வில்லை. மேலும், விவசாயிகள் மற் றும் பொது மக்கள் தங்கள் நிலங்களை அள வீடு செய்ய தற்பொழுது ஆன்லைன் மூலம்  விண்ணப்பம் செய்யதாலும், அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்ய வருவது இல்லை. இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தால் புகார் தெரிவித்தவரின் அரு கில் இருக்கும் நிலத்தின் உரிமையாளர் அள வீடு செய்ய தடுப்பதாக கூறிவிடுகிறார்கள். பல இன்னல்களுக்கு பிறகு அளவீடு செய்தா லும், நிலத்தின் உட்பிரிவுகளை முறையாக கணினியில் பதிவு செய்வது இல்லை. ஆனால்  இப்பகுதியில் நடைபெறும் வீட்டுமனை பிரிப்புகளுக்கு தேவையான அனைத்து உத விகள் மற்றும் அரசு தரப்பில் செய்ய வேண் டிய வேலைகளை வருவாய்த்துறை அதிகாரி கள் அவர்களின் அலுவலகம் சென்று செய்கி றார்கள்.  இப்படி தொடர்சியாக நில அளவை பிரி வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் .அனைவருக்கும் நிலத்தை அளக்க அரசு விதிப்படி செயல்பட நடவ டிக்கை எடுக்க வில்லை என்றால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றார்கள்.

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் கட் டுப்பாட்டில் இருக்கும் உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகள் மற்றும் பொது  மக்களின் நலனை கவனத்தில் கொள்ளா மல், இப்பகுதியில் செழிப்பாக நடக்கும்  ரியல் எஸ்ட்டேட் துறைக்கு சேவை செய்து  வருவாதகவும், பட்டா மாறுதல் உள்ளிட்ட அடிப்படையான வருவாய்த்துறை வேலை களுக்கு பணம் பெற்று தான் பட்டா மாறுதல்  நடைபெறுகிறது. இதற்கு உதாரணாக தான்  ஜம்புக்கல் மலை தனியார் ஆக்கிரமிப்பு,  மடத்துக்குளம் கணியூர் பத்திரபதிவுத்து றையில் நடைபெற்ற முறைகேடுகளை கண் டித்து இப்பகுதியில் போராட்டங்கள் நடை பெற்றது.