districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

உலக எழுத்தறிவு தினம்

நாமக்கல், செப். 8- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வேதாந்தபுரம் பகு தியில் மாணவ மாணவிகளுடன், உலக எழுத்தறிவு தினம் ஞாயிறன்று  கொண்டாடப்பட்டது. மனித குலத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றங்களுக்கு எழுத்தறிவு என்பது மிகப்பெரிய தடையாக இருப்பதை ஒரு  கட்டத்தில் உலக நாடுகள் உணர்ந்தன. இதையடுத்து, 1965ம்  ஆண்டில் ஈரான் நாட்டின் தலைநகர் டெக்ரானில், உலக நாடு களின் கல்வி அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது. இந்த  மாநாட்டில், எழுத்தறிவின்மையால் உலக நாடுகளில் ஏற்படும்  அரசியல், சமூக பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவா திக்கப்பட்டது. உலகிலிருந்து எழுத்தறிவின்மையை அறவே  ஒழிக்க தேவையான அனைத்து பணிகளையும், நடவடிக்கை களையும் பட்டியலிட்டு அறிக்கை அளித்தது. இதையடுத்து,  1966 ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி நடத்திய யுனெஸ்கோ வின் 14 ஆவது பொதுக்குழுவில்,  எழுத்தறிவின்மையை போக்குவதற்காக மாநாடு நடை பெற்ற செப்டம்பர் 8ம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக  அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, 1967ம் ஆண்டு முதல் ஒவ் வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவு  தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக,  குமாரபாளையத்தில் உலக எழுத்தறிவு தினம் தன்னார்வ அமைப்பினரால் கொண்டாடப்பட்டது. இதில் மாணவ மாண விகளுக்கு எழுத்துப் போட்டி வைக்கப்பட்டு நன்றாக எழுதிய  மாணவ மாணவிகளுக்கு பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட் டது.

இரு வண்ணங்களில் டேலியா மலர்

உதகை, செப்.8- அரசு தாவரவியல் பூங்காவில் ஒரே காம்பில் மஞ்சள் மற் றும் சிவப்பு ஆகிய இரு வண்ணங்களில் பூத்த டேலியா மலரை  சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது இரண் டாம் சீசனுக்காக அரசு தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்று லாப் பயணிகளைக் கவரும் வகையில் பல வண்ண மலர்கள்  நடவு செய்யப்பட்டு தற்போது பூத்துக் குலுங்க தொடங்கி யுள்ளன. இதில், ஒரே காம்பில் மஞ்சள் மற்றும் சிவப்பு என இரு  வண்ணங்களில் டேலியா மலர் பூத்துள்ளது. இதனை சுற்று லாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

நெல் கொள்முதல் செய்ய லஞ்சம்: தற்கொலைக்கு முயன்ற விவசாயி

சிதம்பரம், செப்.8 - நெல் கொள்முதல் செய்ய லஞ்சம்  கேட்ட தால் விவசாயி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. கடலூர் மாவட்டம், திருமுட்டம் வட்டம், பாளையங்கோட்டை வடபாதி   அக்ரஹார த்தை சேர்ந்தவர் பட்டுசாமி.  அவரது மகன் சந்தோஷ் குமார் (45)  தனக்கு சொந்தமான 13 ஏக்கர் வயலில்  விளைவித்த நெல்லை வலசக்காடு நெல் கொள்முதல் நிலையத்திற்கு ஆக. 10 ஆம் தேதி எடுத்துச் சென்றுள்ளார். நெல்லை கொள்முதல் செய்வதற்கு கமி ஷனாக 50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ள னர். அப்போது சந்தோஷ் குமார் ரூ.30  ஆயிரம் கொடுத்துள்ளார். ஆனால் கொள்முதல் நிலைய ஊழியர்கள் 120  மூட்டைகள் மட்டும் கொள்முதல் செய் துள்ளனர். மீதி மூட்டை களை எடைபோ டாமல் தாமதம் செய்துள் ளனர். இத னால் எஞ்சிய மூட்டைகளை கொள் முதல் செய்ய எடை போடுமாறு தினசரி  விவசாயி வலியுறுத்தி உள்ளார். இதற்கு  ஊழியர்கள் எஞ்சிய ரூ. 20 ஆயிரம் கொடுக்க நிர்பந்தித்து உள்ளனர்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகா ரிகளி டம் சந்தோஷ் குமார் புகார் தெரி வித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.  இந்த நிலையில் நெற் பயிர்கள் முளைத்துள்ளது. அதை பார்த்து வேதனை அடைந்து கொள்மு தல் ஊழியர்களிடம் முறையிட்டார். இத னால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலை யில்,  ஊழியர்கள் சந்தோஷ்குமாரை தரக் குறைவாக பேசியுள்ளனர்.  இதனால் மன உளைச்சல் அடைந்த அவர், செப்.6  ஆம் தேதி  தனது வீட்டில் பூச்சிக் ்கொல்லி  மருந்து குடித்துவிட்டார். இதனைய றிந்த உறவினர்கள் அவரை அண்ணா மலை நகர் ராஜா முத்தையா மருத்துவக்  கல்லூரி மருத்துவ மனையில் அனும தித்தனர். இதனையறிந்த அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கே.சர  வணன், விவசாயத் தொழிலாளர் சங்க   மாவட்டச் செயலாளர் எஸ்.பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் பழ.வாஞ் சிநாதன், கரும்பு விவசாயிகள் சங்க  நிர்வாகிகள் கே.ஆதிமூலம், ஆர். அண்ணாதுரை, மாவட்டத் துணைத் தலைவர் நெடுஞ்சேரலாதன், மாவட்ட த் துணைச் செயலாளர் எஸ்.மணி, விவ சாய சங்க குறிஞ்சிப்பாடி ஒன்றிய  நிர்வாகி ஜி.வெங்கடேசன்,  உள்ளிட்  டவர்கள் மருத்துவமனைக்கு சென்று  விவசாயின் உறவினர்களுக்கு ஆறுதல்  கூறினர்.

கோ விளையாட்டு - கோவை மாணவி அசத்தல்

கோவை, செப்.8- தேசிய அளவில் 14 மாநிலங்கள் மோதிய கோ விளையாட்டு போட்டியில்  கோவையைச் சேர்ந்த மாணவி தங்கம்  வென்று அசத்தினர். 2024 ஆம் ஆண்டு தேசிய அளவில்  2 ஆவது ஜோடி கோ சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த செப். 2 ஆம் தேதி முதல் செப். 4 ஆம் தேதியன்று வரை பீகாரில் போஜ்பூர், ஆரா ஆகிய பகுதி களில் மூன்று பிரிவுகளாக நடைபெற் றது. அதில், சீனியர், ஜூனியர் மற்றும் சப்  ஜூனியர் ஆகிய பிரிவுகளில் போட்டிகள்  நடத்தப்பட்டது. இதில், சீனியர் இறுதிப் போட்டியில்  தமிழ்நாடு - பீகார் மாநிலங்கள் விளையா டியதில் பீகார் மாநிலம் 43 புள்ளிகள் பெற் றது. தமிழ்நாடு 46 புள்ளிகள் பெற்று 3  புள்ளி வித்தியாசத்தில் தமிழகம் முதல்  இடம் பிடித்தது. ஜூனியர் இறுதிப் போட் டியில் தமிழ்நாடு - தெலுங்கானா  விளை யாடியதில் தெலுங்கானா 14 புள்ளிகள்  பெற்ற நிலையில், தமிழ்நாடு 38 புள்ளி கள் பெற்று 24 புள்ளி வித்தியாசத்தில் தமி ழகம் முதல் இடம் பிடித்தது. சப் ஜூனியர்  அரை இறுதிப் போட்டியில் தமிழ்நாடு -  ஆந்திரா விளையாடியதில் ஆந்திரப் பிர தேசம் 18 புள்ளிகள் பெற்றது. தமிழ்நாடு  11 புள்ளிகள் பெற்று 7 புள்ளி வித்தியா சத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழகம் மூன்றாம் இடம் பெற்றது.  இதில், கலந்து கொண்டு கோவை மாவட்டம், சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த லக்சனா(12), 14 வயது அபி னோவ் மற்றும் கதிர்வேல் ஆகியோர்  தங்கம் வென்றனர். சஞ்சய் மூன்றாவது இடம் பிடித்த வெண்கலம் வென்றார். கோவை ரயில் நிலையம் வந்த இவர் கள் அனைவருக்கும் மாலை, அணி வித்து வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,  உலக அளவில் நடைபெறும் போட்டிக ளில் கலந்து கொள்ள மத்திய, மாநில அர சுகள் மாணவர்களை ஊக்குவித்து கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்து தர  வேண்டும் என கோரிக்கை வைத்த னர்.

நீர் ஆவியாவதை தடுக்க அலோசனை

நீர் ஆவியாவதை தடுக்க அலோசனை உடுமலை, செப்.8- சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிக ளில் வைக்கோல் அல்லது தென்னை நார் கழிவு போன்ற வற்றை நிலப்போர்வையாக பயன்படுத்தி நீர் ஆவியாகா மல் தடுக்கலாம் என வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு  ஆலோசனை வழங்கியுள்ளனர். இதுகுறித்து வேளாண் துறையினர் தெரிவித்ததாவது, சாகுபடியில் உள்ள பயிர்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில்  வைக்கோல் அல்லது தென்னை நார் கழிவு போன்றவற்றை நிலப்போர்வையாக இருக்குமாறு நன்கு தூவிவிட்டு, சூரிய  ஒளிக்கதிர்கள் நேரடியாக பூமியில் படுவதை தடுக்கலாம். இம் முறையில் நீர் பாய்ச்சப்பட்ட நிலங்களில் நீர் ஆவியாவதை தடுப்பது மட்டுமில்லாமல், களை வளர்வதையும் கட்டுப்படுத் தும். சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோளம், பயிற் வகைக ளில் மேற்கண்டபடி மூடாக்கு போடுவதாலும், நீர் தேவை  அறிந்து நீர் பாய்ச்சுவதாலும், மகசூல் இழப்பை குறைக்க லாம். மேலும், மாலை நேரங்களில் நீர் பாய்ச்சும் பணியினை  செய்து நீண்ட நேரம் வரை மண் ஈரம் காத்து வறண்ட சூழலிலி ருந்து பயிரை காக்கலாம். நிலச்சரிவிற்கு குறுக்கே ஆழச்சால்  அகலப்பாத்தி முறையினை கடைபிடித்து சாகுபடி மேற் கொள்ளலாம். மழை கிடைக்கும் போது சரிவிற்கு குறுக்கே  மழைநீரை வழிந்தோட செய்வதன் மூலம் நிலத்தின் ஈரத்தன் மையை அதிகப்படுத்தலாம். ஆழச்சால் அகலப்பாத்தியில் நீர் பாய்ச்சும் போது ஒரு  வரப்புவிட்டு மறு வரப்பிற்கு நீர் பாய்ச்சும் முறையில் நீர்  பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வறட்சியை ஓரளவு சமாளிக் கலாம். முருங்கை சாகுபடியில் ஊடுபயிராக நிலக்கடலை, உளுந்து அல்லது வெங்காயம் போன்ற பயிர்களை சாகுபடி  செய்தலில் உள்ள நீர் மேலாண்மையால் இரட்டிப்பு வருமா னம் கிடைக்கும் என்றனர். மேலும், இதுதொடர்பான கூடுதல்  விபரங்களுக்கு விவசாயிகள் வட்டார வேளாண் உதவி இயக் குநர் அலுவலகத்தை அணுகலாம். என தெரிவித்தனர்.

திருப்பூர் ரயில்நிலையத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வாகன நிறுத்தம்

திருப்பூர், செப்.8- ரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட் டில் உள்ள பார்க்கிங்கில் மேற்கூரை மற் றும் சுற்றுச்சுவர் இல்லாததால், வாக னங்களை நிறுத்தி செல்ல அச்சமாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் பணி நிமித்தமாக ஏராள மானோர் கோவை மாவட்டத்திற்கும், ஈரோடு, சேலம் பகுதிகளுக்கும் சென்று  வருகின்றனர். அதேபோல் விடுமுறை நாட்களில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மதுரை,  திருச்சி, வேலூர், சென்னை என தங்கள்  சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்ற னர். அவ்வாறு செல்லும் தொழிலா ளர்கள் ரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் குத்தகைக்கு விடப் பட்டுள்ள இருசக்கர வாகன நிறுத்தம் இடத்தில் வாகனங்களை நிறுத்தி  செல்கின்றனர். திருப்பூர் ரயில் நிலை யத்தின் இரண்டு நுழைவாயில்களிலும் வாகன நிறுத்ததுமிடங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நிறுத்தப்படும் சைக்கிள்களுக்கு 12 மணி நேரம் வரை 5 ரூபாயும், அதற்கு மேல் 10  ரூபாயும், மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர வாகனத்திற்கு 4  மணி  நேரத்திற்கு 10 ரூபாய்,  4 மணியிலிருந்து  12 மணி நேரத்திற்கு 15 ரூபாய்,  12  மணி நேரத்திலிருந்து 24 மணி நேரத் திற்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.  அதே போல் இருசக்கர வாகனத் திற்கு 4 மணி நேரத்திற்கு 10 ரூபாயும்,  நான்கு மணியிலிருந்து 12 மணி  நேரத்திற்கு 20 ரூபாயும் 12 மணி நேரத்திற்கு மேல் 25 ரூபாயும் வசூலிக் கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குமரன் நினைவகம்  அருகே உள்ள ரயில்வே நிர்வாகத்தின்  கட்டுப்பாட்டில் உள்ள பார்க்கிங்கில் மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவர் இல்லா ததால் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி  வருகிறது. ஏற்கனவே இருந்த பார்க்கிங்  இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடை பெற்று வருகிறது.  அதன் அருகிலேயே  ரயில்வே நுழைவு வாயிலில் தற்காலிக  பார்க்கிங் கடந்த 5 மாதத்திற்கு மேலாக  செயல்பட்டு வருகிறது. இன்னும் சில  மாதங்கள் அதே இடத்தில் செயல்படக் கூடிய நிலை உள்ளது. இந்நிலையில் மேற்கூரை மற்றும் தடுப்புச் சுவர் இல் லாததால் பாதுகாப்பு வசதி இல்லா மல் உள்ளது. இதனால் பார்க்கிங்கில்  நிறுத்திச் செல்லும் வாகனங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந் தும் வருகிறது. மேலும் தடுப்புச்சுவர்  இல்லாமல் மூன்று புறங்களும் தகர  கூரையை வைத்து தடுத்துள்ளனர்.  இருசக்கர வாகனத்தின் பாதுகாப்பிற் காக பணம் கொடுத்தும் பாதுகாப்பு வசதி இல்லாதது இருசக்கர  வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ரயில்வே நிர்வா கம் இதனை கருத்தில் கொண்டு தற்கா லிக ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண் டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பு
மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பு திருப்பூர், செப்.8- திருப்பூரில் விடுமுறை தினத்தை முன்னிட்டு மாநகர போலீ சார் ஞாயிறன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த னர். தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வந்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர். வெளி மாநிலத்தி லிருந்து வரக்கூடிய தொழிலாளர்களுக்கு பின்னலாடை நிறு வனங்களிலேயே விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டி ருப்பதன் காரணமாக விடுதிகளிலேயே தங்கி நிறுவனங்க ளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு வார விடுமுறை  நாட்களில் பின்னலாடை நிறுவனங்களில் இருந்து பேருந்து கள் மூலம் புது மார்க்கெட் பகுதிக்கு அழைத்து வருவது வழக் கம். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக புது மார்க்கெட் வீதி, குமரன் சாலை,  மாநகராட்சி சந்திப்பு உள் ளிட்ட பகுதிகளில் அதிக அளவு காணப்பட்டனர். மேலும் ஞாயி றன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் கோவிலுக்கு செல்லக்கூ டிய பொதுமக்கள் என பேருந்து நிலையம்,  புது மார்க்கெட்  வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மக்கள் கூடியதால்  கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து, மாநகர போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.