சென்னை, டிச. 23- 33ஆவது உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிக ளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா வடசென்னை மாவட்டத்தில் ஆர்.கே. நகர், பெரம்பூர், மணலி பகுதிகளில் நடைபெற்றது. பெரம்பூரில் இரண்டு பேருக்கு வீல் சேர் வழங்கப்பட்டது. 150 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. ஆர்.கே. நகரில் இரண்டு பேருக்கு வீல் சேர், கண் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு ஸ்டிக் வழங்கப்பட்டது. 150 பேருக்கு அரிசி பருப்பு, உப்பு, புளி உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. மணலியில் 4 பேருக்கு தையல் இயந்திரமும், 100 பேருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் மாநில துணைத்தலைவர் பாரதி அண்ணா, மாவட்டத் தலைவர் ஆர் ஜெயச்சந்திரன், செயலாளர் எஸ்.ராணி, பொருளாளர் ஆர்.நடராஜன், நிர்வாகிகள் தில்ஷாத் பேகம், சாரதி, ரவி, பிரேமா, கீதா, குருமூர்த்தி, உமா மகேஸ்வரன், வெங்கடேசன், சாந்தி செல்வம் (ரோட்டரி கிளப்), கோபால் (செம்மல் பவுண்டேஷன்) டாக்டர் நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.