districts

img

2 கி.மீ தூரத்திற்குள் 100 நாள் வேலை கோரி மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

காஞ்சிபுரம், செப். 3- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு  காத்திருக்கும் போராட்டம் மாவட்ட துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் அடையாள அட்டை உடனடியாக வழங்கிட  வேண்டும்,  சுழற்சிமுறை இல்லாமல் தொடர்ச்சியாக 100 நாள் முழுமையாக வேலை வழங்கி இரண்டு கிலோமீட்ட ருக்குள் வழங்கிட வேண்டும், புதிய மாற்றுத்  திறனாளிகளுக்கு நூறுநாள் வேலை மறுக்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடை பெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் சண் முகம் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி னார்.  மாவட்டத் தலைவர் முனுசாமி, ஒன்றிய  செயலாளர் அன்பு, சரவணன், சேகர் உட்  பட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர்  மாற்றுத்திறனாளி களை நேரில் சந்தித்து மூன்று தினங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.