districts

img

கல் அரைக்கும் தொழிற்சாலை, குவாரியை அகற்றவேண்டும்

ராணிப்பேட்டை, பிப். 17 -  ஆற்காடு அருகே இயங்கி வரும் கல்குவாரி மற்றும் கல் அரைக்கும் இயந்திர தொழிற்சாலை அப்புறப்படுத்த கோரி கிராம மக்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த நந்தியாலம் கிராமத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுற்று வட்டாரப் பகுதியில் கல்குவாரி மற்றும் கற்கள் அரைக்கும் அரவை இயந்திரம் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைகளுக்கு  நந்தி யாலம் ஊர் வழியாக கடந்து செல்லும் கனரக வாகனங்களால் பொதுமக்கள், பள்ளி உள்ளிட்ட அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சாலைகள் பழுதடைந்து போக்குவரத்து பயன்படுத்த முடியாமல் குண்டும் குழியுமாக மாறிவிடுகிறது. அங்கு வசிக்கும் வீடுகளில் புழுதி அதிகப்படியாக சேர்வதால் சுவாச கோளாறு உள்ளிட்ட நோய்கள் வருவதாக கூறப்படுகிறது. எனவே, கல்குவாரி மற்றும் அதை சார்ந்த தொழிற்சாலைகளை உடனடியாக மூட ஏற்கெனவே பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையில் புகார் அளித்திருந்த நிலையில் தற்போது புதிதாக மீண்டும் ஒரு தனியார் நிறுவனம் அங்கே நிறுவப்பட உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் நந்தியாளம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினகிரி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, துறை சார்ந்த அதிகாரிகள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்ததன் பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.