districts

img

முதுகுத் தண்டுவட பாதிப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை

சென்னை, டிச.23- தமிழகத்தில் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப் பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாற்றுத்திற னாளிகள் நல இயக்குநர் லெட்சுமி உறுதி யளித்துள்ளார். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் தலைமையில், முதுகுத்தண்டு வடம் பாதித்தோர் மாநில கிளை அமைப்பாளர் எஸ்.பகத்சிங், இணை ஒருங்கிணைப்பாளர் சசிகுமார் ஆகியோர் சென்னை லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் அடங்கிய  தொகுப்பை வீடு தேடி வந்து வழங்குதல், படுக்கை புண்ணால் பாதிக்கப்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல், அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் அமைத்தல், வாரம் இருமுறை வீடு தேடி வந்து பிசியோதெரபி சிகிச்சை அளித்தல், மறுவாழ்வு பயிற்சி மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் இடம்பெற்றுள்ளன. மேலும், வாட்டர் பெட், ஏர் பெட் ஆண்டு தோறும் வழங்குதல், நிரந்தர அடையாள அட்டை வழங்குதல், குசனுடன் கூடிய வீல்சேர், பெட்ரோல் ஸ்கூட்டர், பாத்ரூம் வீல்சேர் வழங்குதல், மாதாந்திர உதவித்தொகையை ரூ.2 ஆயிரமாக உயர்த்துதல், பாதுகாப்பு இல்லங்கள் அமைத்தல் போன்ற கோரிக்கை களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இக்கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் லெட்சுமி, பெரும்பாலான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  உறுதியளித்துள்ளார்.