சென்னை, ஏப். 21- மத்திய அரசு உத்தரவை மீறி மாநிலக் கணக்காயர் செயல்படுவதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா தொற்று இரண்டாவது அலை மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. சென்னை யில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மண்ட லங்கில் முதல் இடத்தில் தேனாம்பேட்டை உள்ளது. இந்தப் பகுதியில்தான் மாநிலக் கணக்காயர் (ஏ.ஜி.) அலுவலகம் செயல் படுகிறது. இந்த ஏ.ஜி. அலுவலக வளாகத்தில் மூன்று தணிக்கை அலுவலகங்களும், கணக்குப் பிரிவு மற்றும் பயிற்சி அலுவலகம் செயல் படுகின்றன. கணக்கு பிரிவு அலுவலகத்தில் சுமார் 1000 பேர் பணிபுரிகின்றனர். இங்கு தான் மாநில அரசு ஊழியர்களின் ஓய்வூதி யம், வருங்கால வைப்பு நிதி, மாநில அரசு கணக்குகள் பராமரிக்கப்படுகிறது. கொரோனா பரவலின் இரண்டாம் அலை யைக் கணக்கில் கொண்டு, அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், கணக்குத் தணிக்கை அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் பணிபுரிய அறிவுறுத்தி மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. அதன்படி ஏ.ஜி அலுவலக வளா கத்திலுள்ள மூன்று தணிக்கை அலுவல கங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் பணி புரியத் தொடங்கிவிட்டன. ஆனால், அதிக ஊழியர்களையும், இட நெருக்கடியும் கொண்ட கணக்குப் பிரிவில், அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்று கணக்காயர் நிர்பந்திப்ப தாக தெரிகிறது. கணக்குப்பிரிவு அலுவல கத்தில் ஏற்கெனவே பலர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி, சிசிக்சை பெறுவது அதிகரித்து வருகிறது. இருப்பினும், மத்திய அரசின் உத்தரவை கணக்காயர் அமல்ப டுத்த மறுப்பது ஊழியர்களிடையே அதி ருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 50 சதவீத ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்க வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்ட போதும், அதனை கணக்காயர் அமல் படுத்தவில்லை என்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மத்திய அரசு மற்றும் சிஏஜி உத்தரவையும் மீறி செயல்படும் கணக்கா யர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.