வேலூர், ஏப். 29- வேலூரில் பிரபல ஜவுளிக் கடையில் (சென்னை சில்க்ஸ்) ரகசிய வழியில் வாடிக்கையாளர்களுக்கு அனுமதி மாநக ராட்சி அதிகாரிகள் கடையை மூடி சீல் வைத்து, ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர். மாநகராட்சி பகுதிகளில் 3 ஆயிரம் சதுரஅடி கொண்ட துணிக் கடைகள் மற்றும் ஷோரூம்களை புதன்கிழமை (ஏப். 28) முதல் மூச தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் வேலூர் மாநகராட்சி பகுதியில் மூவாயிரம் சதுர அடி கொண்ட 23 கடைகள் புதனன்று மூடப்பட்டன. இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சர்வீஸ் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் வியாழனன்று (ஏப். 29) காலை முன்பக்க வழியை மூடிவிட்டு ரகசிய வழியில் வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்பி னர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஆணையர் சங்கரன் கடைக்கு சீல் வைக்க உத்தர விட்டார், ரூ.1 லட்சம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. மேலும் இனிமேல் தவறு செய்தால் மூன்று மாதகாலம் கடையை மூடிவிட வேண்டியிருக்கும் என எச்சரித்தார்.