districts

img

தனியார் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை

புதுச்சேரி, பிப்.17-  புதுச்சேரி தவளகுப்பம்  தனியார் பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மற்றும் தாளாளரை கைது செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தவளகுப்பம் தனியார் பள்ளி தாளாளர் மற்றும் சம்பந்தப்பட்ட இயற்பியல் ஆசி ரியர் மீது போக்சோ சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். தொடர்ந்து புதுச்சேரியில் நடை பெற்று வரும் சிறுமிகள், பள்ளி மாண வர்கள் மீதான பாலியல் வல்லுறவு சம்ப வத்திற்கு பொறுப்பேற்று மாநில கல்வித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும். புதுச்சேரி முழுவதும் அதி கரித்து வரும் போதை கலாச்சாரத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாதர் சங்கம் சார்பில் இந்திரா காந்தி சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முனி யம்மாள் தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் துவக்கி வைத்தார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் இளவரசி, சிஐடியு அழகு கலை பெண்கள் சங்கத்தின் நிர்வாகி ஜானகி, வாலிபர் சங்கத்தின்  மத்தியக் குழு உறுப்பினர் ஆனந்த், மாநிலச் செயலாளர் சஞ்சய், மாணவர் சங்க மாநில செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் உரையாற்றினர். மாதர் சங்க நிர்வாகிகள் சத்யா, உமா சாந்தி,  மாரிமுத்து, மலர்விழி உட்பட திரளான பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.