districts

கடலூர் உழவர் சந்தையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூர், ஜூலை 21- கடலூர் உழவர் சந்தை பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அதிரடியாக அகற்றப்பட்டன.  கடலூர் உழவர் சந்தையில் 90 நிரந்தர கடைகளும் அதற்கேற்ற வகையில் 432 விவசாயிகளும் பதிவு பெற்றோர்களாக உள்ளனர். சராசரியாக 90 முதல் 100 விவ சாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்காக தினசரி கடலூர் உழவர் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இதற்கி டையே உழவர் சந்தையின் வெளிப்பகுதி யில் சிதம்பரம் சாலையை ஆக்கிரமித்து பல்வேறு கடைகள் இடம் பிடித்துள்ளது. இத னால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவ தோடு, நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து தொடர் புகார்கள் எழுந்த  நிலையில் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிர மணியம் உத்தரவின் பேரில் உழவர் சந்தை யின் வெளிப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த கடைகள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. உழவர் சந்தையில் ஏற்கனவே உள்ள 90  கடைகளுடன் மேலும் 20 புதிய கடைகள்  அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். எனவே கடலூர்  மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வரும்  விவசாயிகள் தங்களது விளை பொருட் களை உழவர் சந்தைப் பகுதியில் விற்பனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் செய்  யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.