districts

img

சிபிஎஸ்இ (CBSE)இல் 212 பணியிடங்கள்

சிபிஎஸ்இ (CBSE)இல்  212 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கல்வி வாரிய அலுவலகங்களில் 212 பணி யிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வந்துள்ளது.  கண்காணிப்பாளர் (Superintendent) - 142 பணியிடங்கள் இந்தப் பணிக்கு அதிகபட்ச வயதுவரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கூடுதலாக ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன் ஆகியவையும் இருக்க வேண்டும். இளநிலை உதவியாளர்(Junior Assistant) - 70 பணியிடங்கள் இந்தப் பணிக்கு அதிகபட்ச வயதுவரம்பு 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு (+2) படித்திருக்க வேண்டும். கூடுதலாக ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் மற்றும் கணினியில் பணிபுரியும் திறன் ஆகியவையும் இருக்க வேண்டும்.  இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அந்தந்தப் பிரிவினருக்கான தளர்ச்சி உண்டு. ஆன்லைன் வழியில் எழுத்துத் தேர்வும், அதன் பின்னர் நேர்முகத்தேர்வும் நடத்தப்படும்.  தமிழ்நாட்டில் சென்னையில் எழுத்துத் தேர்வு நடைபெறும். விண்ணப்பிப்பதற்கான இணைப்பு, தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் விபரங்களை www.cbse.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். கடைசித்தேதி ஜனவரி 31, 2025 ஆகும்.

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வே வேலை

தென் மத்திய ரயில்வேயில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களைக் கொண்டு பணியி டங்களை நிரப்பு வதற்கான அறிவிக்கை வெளியாகி யுள்ளது. மொத்தம் 61 பணியிடங்கள் நிரப்பப்படு கின்றன. குறைந்தபட்ச மாக பத்தாம் வகுப்பு அல்லது +2 அல்லது  ஐடிஐ படித்திருக்க வேண்டும். தட களம், பேட்மிண்டன், கிரிக்கெட், கூடைப் பந்து, கைப் பந்து, ஹாக்கி சைக்கிள், கபடி, ஜிம்னாஸ்டிக், வாலி பால், குத்துச் சண்டை, வில்வித்தை, கால்பந்து, கோ  கோ மற்றும் பளு தூக்குதல் ஆகிய 15 விளையாட்டு களில் தேசிய, மாநில அல்லது பல்கலைக்கழக அள விலான போட்டிகளில் பங்கேற்று குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்க வேண்டும்.  அவரவர் துறைகளில் சாதனைகளின் அடிப்ப டையில் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்படு வார்கள். இதற்காக நேர்முகத் தேர்வு நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் மூத்த எழுத்தர் அல்லது இளநிலை எழுத்தர் ஆகிய பணிகளில் அமர்த்தப்படுவார்கள். கூடுதல் விபரங்களுக்கும், விண்ணப்ப இணைப்புக்கும் www.scr.indian railways.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். கடைசித் தேதி 2025 பிப்.3.

முன் அனுபவம் உள்ளவர்களுக்கு எஸ்.பி.ஐயில் வேலை

இந்தியாவின் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் வணிக நிதி அதிகாரிப் பணியிட நிரப்புதல் அறிவிக்கை வந்திருக்கிறது. 150 இடங்கள் நிரப்பப்படவுள்ளன.  Trade Financial Officer (MMGS-II) இதற்கான சம்பள விகிதம் ரூ. 64,820 முதல் ரூ.93,960 ஆக இருக்கும். குறைந்தபட்ச வயது 23 ஆகவும், அதிகபட்ச வயது 32 ஆகவும்(டிசம்பர் 31, 2024 தேதியின்படி) இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு விதிகளுக்கு உட்பட்டு தளர்ச்சி இருக்கும்.  கல்வித் தகுதியைப் பொறுத்தவரையில், இளநிலைப்பட்டம் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக Indian Institute of Banking & Finance (IIBF) வழங்கும் FOREX சான்றிதழ் பெற்றதோடு, இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம இருக்க வேண்டும்.  https://sbi.co.in/web/careers என்ற இணையதளத்தில் முழுமையான அறிவிக்கை(Notification). விண்ணப்பிப்பதற்கான இணைப்பு ஆகியவை உள்ளன. கடைசித்தேதி ஜனவரி 23, 2025 ஆகும்.