districts

பெத்தேல் நகர் மக்களை பாதுகாத்திடுக

சென்னை,மார்ச் 22- பெத்தேல் நகர் மக்களை அங்கி ருந்து வெளியேற்றாமல் மாநில அரசு பாதுகாக்க வேண்டும் என்று சட்டப்பேர வையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம்சின்னத்துரை, “சென்னை மாநகராட்சி 194வது வட்டம், ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி முழுக்க முழுக்க சதுப்பு நிலம் அல்ல. மேய்ச்சல் புறம்போக்கு நில மாகும். இந்த பகுதியிலுள்ள 3 ஆயிரம் வீடுக ளையும் நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி இடிக்க முயற்சித்தால், அவர்களின் அலறல் சத்தம் கேட்டு தமிழகமே அதிர்ச்சிக்குள்ளாகிவிடும். ஆகவே 3 ஆயிரம் குடிருப்புகளுக்கும் பட்டா வழங்கி மக்களை பாதுகாக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தார். பெத்தேல் நகரில் வசிக்கும் மக்களை பாதுகாக்க மாநில அரசு, குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தற்போது சீல் வைத்திருக்கும் கடைகளை மீண்டும் திறப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் சின்னதுரை வலியு றுத்தினார். இதற்கு பதிலளித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகை யில், “பெத்தேல் நகர் பிரச்சனையை அரசும் நானும் நன்கு அறிவோம். உறுப்பினர் சின்னதுரை சார்ந்த இயக்கத்தினர்தான் அந்த பிரச்சனையில் தலையீட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு தரப்பில் பல முறை பேச்சுவார்த்தை நடத்த ப்பட்டது. ஆனால், நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி, வீடுகளை இடிப்பதற்கு அரசு தரப்பில் முயற்சிப்பதாக சின்ன துரை தெரிவித்த முறையில் முயற்சிக்க வில்லை” என்றார்.  “பெத்தேல் நகரில் 50 ஏக்கர் நிலம் மட்டுமே மேய்க்கால் புறம்போக்கில் உள்ளது. மற்ற நிலம் முழுவதும் நீர்வழிப் புறம்போக்கில் உள்ளது. இதனால், நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு அந்த மக்களை தமிழக அரசு பாதுகாக்கும்.” என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்  இவ்வாறு அவர் தெரிவித்தார்.