districts

பணி நிரந்தரம் கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்டை

சென்னை, செப். 9- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அஞ்சல்  அட்டை அனுப்பி செவிலியர்கள் போராட்டத்  தில் ஈடுபட்டு வருகின்றனர். 2015ஆம் ஆண்டு மருத்துவ தேர்வா ணைய வாரியத்தின் மூலம் தேர்வு எழுதி அரசு  செவிலியர் பணிகளில் ஒப்பந்த ஊழியர்களாக  ரூ. 7 ஆயிரம் ஊதியத்திற்கு பணியில் சேர்ந்வர்  கள், தற்போது ரூ.14 ஆயிரம் ஊதியம் பெறு கின்றனர். அதேபோல் 2019ஆம் ஆண்டு தேர்வெழுதிய செவிலியர்களும் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்டனர். இது போன்று தேர்வு எழுதி ஒப்பந்த  பணியில் இருக்கும் 15 ஆயிரம் செவிலியர்க ளில் 3,214 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்த ரம் செய்யப்பட்டுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதியின் படி மற்றவர்களையும் உடன டியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அஞ்சல் அட்டை மூலம் தங்கள் கோரிக்கையை முதல்வருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தமிழ்நாடு எம்ஆர்பி செவிலி யர்கள் மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் கூறுகை யில்,  கடந்த ஆட்சியின் போது பல முறை  நாங்கள் கோரிக்கை வைத்தும் அரசு செவி  சாய்க்கவில்லை. தற்போது பொறுப்பேற்றி ருக்கும் அரசு தனது தேர்தல் அறிக்கையில் செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதாக உறுதியளித்தது. முதல்வரின் கவனத்தை ஈர்க்க செப்டம்  பர் 1ஆம் தேதி முதல் இரண்டு வார காலம் அஞ்சல் அட்டை மல்ம் எங்கள் கோரிக் கையை அனுப்பி வருகிறோம். இதுவரை சுமார்  2 ஆயிரம் அஞ்சல் அட்டைகள் முதல்வ ருக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றனர்.