ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள பணமாக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎஸ்என்எல் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கடலூரில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ் மாநில ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் என்.குப்புசாமி தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் உதவி பொதுச்செயலாளர் எஸ்.செல்லப்பா, பொதுச் செயலாளர் பி.அபிமன்யு, அமைப்பாளர் ஏ.பாபுராதாகிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் எஸ்.மோகன்தாஸ் சி.வினோத்குமார், எஸ்.நடராஜன் ஆகியோர் பேசினர்.