கொரோனா நிவாரண நிதி 2ஆம் கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் செவ்வாயன்று (ஜுன் 15) வழங்கினார். இதில் கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்றத் தலைவர் நமச்சிவாயம், கவுன்சிலர்கள் இந்திரா, திருமலை, ஜெயந்தி கூட்டுறவு சங்க தலைவர் நாகமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.